கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், பல விமான நிறுவனங்களும் பல விமான நிலையங்களும் பலவித ஏற்பாடுகளை செய்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துகின்றன. இதில் ஒரு புதிய முயற்சியாக, சிங்கப்பூர் ஏர்லைனஸ் COVID-19 இலிருந்து பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு டிஜிட்டல் சுகாதார அட்டைகளை வழங்கத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) புதன்கிழமை புதிய டிஜிட்டல் சுகாதார சரிபார்ப்பு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இது சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) டிராவல் பாஸ் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட முதல் முறையாகும்.
இது வாடிக்கையாளர்களுக்கு "COVID-19 சோதனைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் எதிர்காலத்தில் அவர்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றை பாதுகாப்பாக சேமித்து வழங்க” அனுமதிக்கும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.
ஜகார்த்தா மற்றும் கோலாலம்பூரில் (Kaula Lumpur) தேர்ந்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு கியூஆர் குறியீட்டைக் (QR Code) கொண்ட டிஜிட்டல் அல்லது காகித சுகாதார சான்றிதழ்கள் வழங்கப்படும்.
உள்வரும் பயணிகள் நாட்டின் நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகள் மொபைல் சான்றிதழ் மூலம் இந்த சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பார்கள் என்று விமான நிறுவனங்கள் மேலும் தெரிவித்தன.
ALSO READ: UK இருந்து இந்தியாவுக்கு வந்த 22 பயணிகளுக்கு கொரோனா பாசிட்டிவ்! அடுத்தது என்ன?
ஆரம்பத்தில், இந்த சேவை டிசம்பர் 23 முதல் ஜகார்த்தா அல்லது கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் (Singapore) செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும். இதன் செயல்பாடு வெற்றிகரமாக இருந்தால், இந்த சேவை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டிராவல் பாஸ் கட்டமைப்பை முழுவதுமாக சிங்கப்பூர் ஏர் மொபைல் செயலியில் 2021 நடுப்பகுதியில் இருந்து ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் SIA தெரிவித்துள்ளது.
ALSO READ: UK இல் இருந்து சென்னை வந்த 2800 பேருக்கு பரிசோதனை: அச்சப்படத் தேவையில்லை என அறிவுறை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR