ஆப்கானிஸ்தானை கைப்பற்ற தாலிபான்கள் கடந்த சில காலங்களாக ஆப்கானில் வன்முறை வெறியாட்டம் போட்டு வருகின்றனர். ஆப்கானின் முக்கிய நகரங்களை தாலிபான்கள் கைபற்றியுள்ளனர். முன்னதாக தலைநகர் காபூல் மட்டுமே ஆப்கான் அரசிடம் இருந்தது. ஆனால், அதுவும் தற்போது தாலிபான்கள் வசம் சென்று கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) நான்காவது பெரிய நகரமான மசார்-இ-ஷெரிப்பின் கட்டுப்பாட்டை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு நாளுக்குப் பிறகு தாலிபான் ஜலாலாபாத்தை கைப்பற்றியுள்ளது. ஜலாலாபாத் நகரமும் தாலிபான் வசம் சென்ற பிறகு, தற்போது காபுல் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பெரிய நகரமாக இருந்தது.
ஆனால், தற்போது வந்துள்ள செய்திகளின் படி, காபூல் நகரத்தையும் தாலிபான்கள் சுற்றி வளைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காபூலில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றதாக அல்ஜசீராவில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான செய்திகள், ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி சிறிது நேரத்தில் பதவி விலகக் கூடும் என கூறப்படுகிறது.
ALSO READ | Afghanistan: 90 நாட்களில், தாலிபான் வசமாகும் என எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை
தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் தலைநகரை எல்லா பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்து உள்ளே நுழையத் தொடங்கினர். ஆப்கானிஸ்தான் இராணுவம் அவர்களை தடுக்க முயன்ற போதிலும் பலன் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தலிபான் செய்தித் தொடர்பாளர் காபூலை பலவந்தமாக கைப்பற்ற விரும்பவில்லை என்று கூறியுள்ளார். முன்னதாக, இன்று கிழக்கு நகரமான ஜலாலாபாத்தையும் தாலிபான் கைப்பற்றியது. இது தவிர, குனார் மாகாணத்தின் அசதாபாத் நகரத்தின் தலைநகரம் மற்றும் பக்திகா மாகாணத்தின் தலைநகரமும் தலிபான் தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சனிக்கிழமையன்று, தலிபான்கள் முக்கிய நகரங்களான மஸார்-இ-ஷெரீப் மற்றும் வடக்குப் பகுதியில் உள்ள மைமானா நகரங்களையும், நாட்டின் கிழக்கு பகுதியில் கார்டெஸ் மற்றும் மெஹ்தர்லாம் ஆகிய நகரங்களையும் கைப்பற்றியதாக அறிவித்தனர். மே மாதத்தில் சண்டை தீவிரமடைந்ததிலிருந்து இதுவரை 20 க்கும் மேற்பட்ட மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ALSO READ | தாலிபான் வசமானதா ஆப்கானிஸ்தான்; ஆப்கான் அரசு கூறுவது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR