ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து நிர்வாக அமைப்பில் அதிரடியாக பல மாற்றங்களைச் செய்துள்ள தலிபான்கள், இப்போது மேலும் சில அதிர்ச்சி அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
தற்போது முன்னாள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஐந்து துறைகளை முற்றிலுமாக கலைக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் கலைக்க நினைக்கும் முக்கிய துறைகளில் ஒன்று மனித உரிமை ஆணையம். இது அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கான் அரசாங்கத்தின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கான் அரசு சுமார் 501 மில்லியன் டாலர் பட்ஜெட் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில், இந்த துறைகளின் பராமரிப்பு 'தேவையற்றது' என்று கருதி, நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்ற கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தத் துறைகள் அவசியமானதாகக் கருதப்படாததால், பட்ஜெட்டில் இதற்கான தொகை ஒதுக்கப்பட வில்லை. எனவே அவை கலைக்கப்பட்டன" என்று தலிபான் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் இன்னாமுல்லா சமங்கானி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | பெண்கள் விமானத்தில் தனியே பறக்கத் தடை
கலைக்கப்படும் மற்றொரு பெரிய துறை ஆப்கானிய அரசியலமைப்பை மேற்பார்வையிடும் கமிஷன் ஆகும். 2021ல் நாட்டைக் கைப்பற்றிய பிறகு, ஆட்சியில் மிதமான அணுகுமுறையை எடுப்பதாக தலிபான்கள் உறுதியளித்தனர். இருப்பினும், இந்த இரண்டு முக்கியமான துறைகளும் கலைக்கப்பட்டதன் காரணமாக, மீண்டும் தாலிபான்களின் நிர்வாகம் குறித்த பெரும் கவலையை உலகிற்கு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை... தாலிபன்களின் புதிய கட்டுப்பாடு
பட்ஜெட் காரணம் காட்டி கலைக்கப்பட்ட முக்கிய துறைகளின் பட்டியலில் தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் சபை (HCNR) மற்றும் தேசிய பாதுகாப்பு சபை ஆகியவையும் அடங்கும்.
2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கான் நாட்டை கைப்பற்றிய பின்னர் தாலிபான் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட முதல் தேசிய பட்ஜெட் இதுவாகும். நாட்டின் நிதி நிலைமைகளை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக சமங்கானி கூறினார். எதிர் காலத்தில் தேவைப்பட்டால், கலைக்கப்பட்ட துறைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.
மேலும் படிக்க | ஆண் வேடம் அணிந்து வெளியே செல்லும் பெண்கள்: ஆப்கானிஸ்தானில் அவல நிலை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR