இன்றைய (08-04-2018) உங்கள் ராசிபலன் - பார்க்க!

ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாள் எப்படி இருக்கும்: உங்கள் அதிஷ்ட நிறம் மற்றும் அதிஷ்ட எண் - உள்ளே!!

Last Updated : Apr 8, 2018, 08:05 AM IST
இன்றைய (08-04-2018) உங்கள் ராசிபலன் - பார்க்க! title=

மேஷம்: 
இன்று வெற்றியை ஈட்டுவர். அலுவலகப் பெண்களுக்கு அதிகாரம், பதவியில் உள்ளவர்களின் ஆரோக்யமான உதவிகள் கிடைக்கும். இதனால் பல வசதிகளை அடையலாம். எதிர்பாராத பண உதவிகளும் கிடைக்கும். கடும் ஜுரம், விவாதங்கள், கலகம், அடுத்த வீட்டாருடன் சதா சண்டை இவை நேரும். கவனமாக இருக்கவும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். யாருடைய தூண்டுதலுக்கும் செவி சாய்க்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்: 
இன்று புதிய தொழில்கள் துவங்கும்போது கூட்டு வியாபாரம் பற்றி சிந்திக்காதீர்கள். எதையும்  தனியாகவே செய்யுங்கள். மனைவிக்கு கழுத்துவலி, நரம்புத் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் காணும். ஏஜென்ட் மூலம் செய்யும் பங்கு, பண பரிவர்த்தனைகள் நஷ்டமடையக் கூடும். இடைத் தரகர்கள் மூலம் அரசு அதிகாரிகளை அணுகுதல் அதிகாரிகளின் கோபத்தை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்:  
இன்று விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது செய்ய முடியும். அடிக்கடி கோபப்படுவீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாக செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்: 
இன்று லாபமான நாளாக அமையும். மிகவும் நிம்மதியாகவும் திட்டமிட்டும்  பணிகளை மேற்கொள்வீர்கள். வீடு, நிலம் போன்றவைகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். பொறியியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு சிக்கல்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

சிம்மம்: 
இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீகச்  சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

கன்னி: 
இன்று அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது. பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும். இரும்பு, எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்: 
இன்று லாபமான நாளாக இன்று அமையும். மிகவும் நிம்மதியாகவும் திட்டமிட்டும் இன்றைய பணிகளை மேற்கொள்வீர்கள். வீடு, நிலம் போன்றவைகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். பொறியியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு சிக்கல்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்: 
இன்று உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

தனுசு: 
இன்று எதிரிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு வீழ்த்துவீர்கள். உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். சொத்து வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மதிப்பு மரியாதைக்கு எந்த விதமான பங்கமும் வராது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

மகரம்: 
இன்று வெற்றுத்தாளில் கையோப்பம் இடும் முன் ஆலோசனைகள் அவசியம். உங்கள் பிரச்சனைகளை நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே சொல்லவும். சில வேளைகளில் மற்றவர்களிடம் சொல்வதே பிரச்சனைகள் ஆகலாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த ஒரு பொருட்களையும் வாங்க வேண்டாம். பிரிந்த நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் ஒன்று சேர்வர். கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலன்களை தற்போது அறுவடை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

கும்பம்: 
இன்று விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது செய்ய முடியும். அடிக்கடி கோபப்படுவீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும் போதெல்லாம் அதை தட்டி வைக்கப் பாருங்கள். உங்களைப்பற்றி எல்லோரும் தவறாக நினைப்பதாக நீங்களே முடிவெடுத்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

மீனம்: 
இன்று பிள்ளைகள் கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் சிநேகம் கிடைக்கும். பிரபலமாவீர்கள். தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க முயற்சிப்பீர்கள். அநாவசிய செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Trending News