கொசுவசத்தி யூஸ் பண்ணாதீங்க மக்களே..! கொசுவலை வாங்கிக்கோங்க - இவ்வளவு ஆபத்து இருக்கு

Mosquito coil | கொசுவத்தியில் இருக்கும் ஆபத்துகள் எல்லாம் மிகவும் ஆபத்தானவை என்பதால், நீங்கள் கொசுவலை வாங்கிக் கொள்வதே நல்லது. ஏன் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 27, 2024, 12:16 PM IST
  • கொசுவத்தி ஆபத்துகளை அறிவீர்களா?
  • மூடிய அறைக்குள் பயன்படுத்தக்கூடாது
  • பதட்டம், மூச்சுத் திணறல் வரும்
கொசுவசத்தி யூஸ் பண்ணாதீங்க மக்களே..! கொசுவலை வாங்கிக்கோங்க - இவ்வளவு ஆபத்து இருக்கு title=

Mosquito coil Side Effects Tamil | கொசுக்கள் கிட்ட இருந்து குளிர்காலத்தில் உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் மலேரியா, டெங்குபோன்ற மிகப்பெரிய உயிர்கொல்லி வைரஸ் நோய்களை கொண்டு வந்துவிடும். அதனால், கொசுக்கள் வீட்டில் அருகில் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், கொசுக்களை ஒழிக்க பெரும்பாலோனோர் பயன்படுத்துவது கொசுவத்தி தான். அந்த கொசுவத்தியில் இருக்கும் ஆபத்துகளை மக்கள் அறிந்து கொள்வதில்லை. கொசுவத்தி வாங்கும்போதே, அந்த கொசுவத்தியால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பது குறித்து ஒரு சிறிய கையேடு கொடுப்பார்கள். அந்த கையேட்டில் மிகச்சிறிய எழுத்துகளில் கொசுவத்தி ஆபத்துகள் விலாவரியாக எழுதப்பட்டிருக்கும். 

மேலும் படிக்க | PMSBY: ரூ 20 செலுத்தினால் போதும்... மத்திய அரசின் ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்

ஆனால், மக்கள் கொசுவத்தி ஆபத்து குறித்த அந்த கையேட்டை பேருக்கூட திருப்பிப் பார்ப்பதில்லை. ஒருமுறை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் கொசுவத்தியால் வரும் ஆபத்துகளை அறிந்து ஷாக்காகிவிடுவீர்கள். கொசுவத்தி வாங்கி யூஸ் பண்றவங்க எல்லோரும் கொசு எதுவும் நம்ம வீட்டுக்குள்ள தப்பித் தவறி கூட வந்திரக்கூடாதுனு நினைச்சு கதவு ஜன்னல எல்லாம் இறுக்க மூடிகிட்டு, பேனயோ அல்லது AC போட்டு விட்டுட்டு கொசுவத்தியையும் பத்த வச்சிட்டு படுத்து தூங்கிவிடுவோம். இந்த தப்பை தான் நீங்க செய்யவே கூடாது. அதனால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். கொசுவத்தியை அதிகபட்சமா அரை மணி நேரம் தான் பயன்படுத்த வேண்டும். கதவு ஜன்னல் எல்லாம் மூடிக்கிட்டு இருக்க கூடிய closed ரூமில் பயன்படுத்தவே கூடாது. 

கொசுவத்தி லிக்விட பயன்படுத்தும் போது கண்டிப்பா கதவு, ஜன்னல் எல்லாம் திறந்தே இருக்கணும்னு அந்த கையேட்டில் கம்பெனி சொல்லியிருக்கு. குறிப்பாக வளர்ப்பு பிராணிகள் நாய்கள் அருகில் கொசுவத்தி வைக்கக்கூடாதுன்னும் கொசுவத்தி உபயோக கையேட்டில் போட்டிருக்கு. கொசுவத்தி ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு பதட்டம், விரக்தி, நடுக்கம் போன்ற அசாதாரண அறிகுறிகள் தென்படும். குமட்டல், வாந்தி, கிறுகிறுப்பு மற்றும் வயிற்று வலி ஆகியவை போன்ற இந்த மாதிரி அறிகுறிகள் ஏற்படும். கொசுவத்தி வைக்கப்பட்டு கொடுக்கும் டப்பாவையும் நாம் எதற்கும் யூஸ் பண்ணவே கூடாதாம். அதேபோல் கொசுவத்தியை எடுத்த கையோடு பச்சிளம் குழந்தைகளை தூக்கக்கூடாது. கொசுக்களிடம் எப்படி பாதுகாப்பாகிருக்கிறீர்களோ அதைப் போலவே கொசுவத்தி உபயோகத்திலும் பாதுகாப்பாக இருப்பது அவசியம். 

சிலருக்கு மூடிய அறைக்குள் பயன்படுத்தும் கொசுவத்தியால் நுரையீரல் சார்ந்த சுவாசக்கோளாறுகள் கடுமையாக ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. சரியாக உபயோக செய்ய தெரியவில்லை என்றால் நீங்கள் கொசு வலை ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வதே நல்லது. ஆண்டு ஒன்றுக்கு கொசுக்கள் பரப்பும் நோய்களால் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் இறப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே கொசுக்களிடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவற்றை விரட்ட அல்லது அழிக்கப் பயன்படுத்தும் கொசுவிரட்டிகளிடம் இருந்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குளிர்காலத்தில் தான் கொசுக்களின் உற்பத்தியும், நடமாட்டமும் அதிகளவில் இருக்கும். எனவே உஷாராக இருக்கவும்.

கொசுக்கள் பரப்பும் நோய்கள் என்று பார்த்தால், டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா, ஜிகா, மஞ்சள் காய்ச்சல், சில அரிதான சமயத்தில் எய்ட்ஸ் நோய் கூட பரவும். ஹெஐவி தொற்று உள்ள நபர்களை கடித்த கொசு வேறு யாரையாவது கடிக்கும்போது அந்த ஹெச்ஐவி தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே கொசுக்கடியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 

மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத்... மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை... இந்த ஆவணங்கள் அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News