மும்பையுடன் மோதிக்கொண்ட சிஎஸ்கே... 3.40 கோடிக்கு தூக்கிய பிளமிங் - யார் இந்த அன்சுல் கம்போஜ்?

Chennai Super Kings: மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்திய ஆல்ரவுண்டர் அன்சுல் கம்போஜ் (Anshul Kamboj) என்ற வீரரை எடுத்தது. ஒரு Uncapped வீரருக்கு ரூ.3.40 கோடி வரை செலவழித்து, சிஎஸ்கே எடுத்திருப்பதன் பின்னணியை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 25, 2024, 07:23 PM IST
  • சிஎஸ்கே அணி அதிகபட்சமாக நூர் அகமதை ரூ.10 கோடிக்கு தூக்கியது.
  • சாம் கரன், முகேஷ் சௌத்ரி, ஷேக் ரஷீத், தீபக் ஹூடாவை சிஎஸ்கே இன்று எடுத்தது.
  • இன்னும் மிடில் ஆர்டரில் அதிரடி வெளிநாட்டு வீரர் தேவையாகும்.
மும்பையுடன் மோதிக்கொண்ட சிஎஸ்கே... 3.40 கோடிக்கு தூக்கிய பிளமிங் - யார் இந்த அன்சுல் கம்போஜ்? title=

Chennai Super Kings: ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) நேற்றை தொடர்ந்து இன்றும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ அணிக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்றிருக்கின்றனர். குறைந்தபட்சம் 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை எடுக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து ஒவ்வொரு அணிகளும் இன்றும் தங்களது படையை பலப்படுத்தி வருகிறது. 

இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்திற்கு முன்னரே தோனி, ருதுராஜ், தூபே, ஜடேஜா, பதிரானா ஆகியோரை தக்கவைத்து ரூ.55 கோடியுடன் மெகா ஏலத்திற்கு நுழைந்தது. சிஎஸ்கே கையில் 1 RTM இருந்தது. நேற்றைய ஏலத்தில் கேஎல் ராகுல், ஸ்டாய்னிஸ் உள்பட பல முக்கிய வீரர்களுக்கு சிஎஸ்கே ஏலம் கேட்டாலும் கடைசி வரை முழு வீச்சாக போகவில்லை. 

சிஎஸ்கே நேற்று எடுத்த வீரர்கள்

இருப்பினும் நூர் அகமது ரூ.10 கோடி, அஸ்வின் ரூ.9.75 கோடி, டெவான் கான்வே ரூ.6.25 கோடி, கலீல் அகமது ரூ.4.80 கோடி, ரச்சின் ரவீந்திரா ரூ.4 கோடி, ராகுல் திரிபாதி ரூ.3.40 கோடி, விஜய் சங்கர் ரூ.1.20 கோடி என தேவையான வீரர்களை தட்டித்தூக்கியது. இதில் ரச்சின் ரவீந்திராவை தக்கவைக்க RTM கார்டை சிஎஸ்கே பயன்படுத்தியது.

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

அந்த வகையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர், வெளிநாட்டு ஹிட்டர்கள், பேக்-அப் வீரர்களை எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டிருந்தது. அதில் துஷார் தேஷ்பாண்டே, தீபக் சஹார் உள்ளிட்ட வீரர்களை எடுக்க முயன்றும் முறையே ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் அவரை சிஎஸ்கேவின் பட்ஜெட்டை தாண்டி சென்று எடுத்துவிட்டது எனலாம். 

சிஎஸ்கே இன்று எடுத்த வீரர்கள்

இருப்பினும், இன்று முதல் வீரராக சாம் கரனை ரூ.2.40 கோடிக்கு சிஎஸ்கே எடுத்தது. இதன்மூலம் சுட்டிக்குழந்தை சிஎஸ்கேவுக்கு திரும்பினார். அடுத்து ஷேக் ரஷீத்தை ரூ.30 லட்சம், முகேஷ் சௌத்ரி ரூ.30 லட்சம், தீபக் ஹூடாவை ரூ.1.70 கோடி கொடுத்து சிஎஸ்கே எடுத்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் சிக்காமல் இருந்தது. அப்போதுதான் ஆல்-ரவுண்டர்கள் செட்டில் அன்சுல் கம்போஜ் ஏலத்திற்கு வந்தார். 

அன்சுல் கம்போஜ்: மும்பையுடன் மோதிய சிஎஸ்கே

இவரை எடுக்க சிஎஸ்கே ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டியது. லக்னோ, டெல்லி அணிகளும் இவரை எடுக்க ஆர்வம் காட்டினாலும் ஓரளவுக்கு ஏலத்தொகை சென்ற பின்னர் ராஜஸ்தான் விலக மும்பை உள்ளே வந்தது. ஆகாஷ் அம்பானி, அன்சுல் கம்போஜிற்கு பெரிய அளவில் சென்றாலும் பிளமிங்கும் விடாமல் சென்று ரூ.3.40 கோடிக்கு தூக்கினார். இந்திய வேகப்பந்துவீச்சாளருக்கு பெரிய டிமாண்ட் இருப்பது உண்மை என்றாலும் ஒரு Uncapped வீரருக்கு மும்பையும், சென்னையும் அடித்துக்கொண்டது ஏன் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கலாம். அந்த வகையில், அந்த அன்சுல் கம்போஜ் யார் என்று இங்கு பார்க்கலாம். 

யார் இந்த அன்சுல் கம்போஜ்?

அன்சுல் கம்போஜ் வேறு யாரும் இல்லை, கடந்த சில நாள்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் அன்சுல் கம்போஜ் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை தூக்கி சாதனை படைத்திருந்தார். அதாவது, ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை எடுக்கும் 3வது வீரர் இவர்தான். அதனால்தான், ரூ.30 லட்சத்திற்கு வந்த இவரை 11 மடங்கு அதிகம் சென்று ரூ.3.40 கோடிக்கு சிஎஸ்கே எடுத்துள்ளது. 

அஸ்வின் எப்போதுமே அன்சுல் கம்போஜ் பெரியளவில் வளர்ந்துவரும் வீரர் என அவரின் யூ-ட்யூப் பக்கத்தில் குறிப்பிடுவார். அந்த வகையில் நேற்று அஸ்வின் அணியில் இணைந்த நிலையில், தற்போது அன்சுல் கம்போஜும் சிஎஸ்கேவில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. பதிரானாவுடன் டெத் ஓவரிலும் சரி, புதிய பந்திலும் கலக்கக் கூடியவர் அன்சுல் கம்போஜ். ஹரியானாவை சேர்ந்த இவர் வேகப்பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் ரன்களை குவிக்கக் கூடியவர். எனவே, நம்பர் 8, 9 சிஎஸ்கே இவரை இறக்கும்.  

மேலும் படிக்க | இந்திய அணி இமாலய வெற்றியை பெற்றது எப்படி...? சீக்ரெட்டை சொன்ன கேப்டன் பும்ரா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News