மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்

Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 26, 2024, 11:52 AM IST
  • Form 6A காகிதமற்ற புதிய அமைப்பின் நன்மைகள்.
  • ஓய்வூதியப் படிவம் 6-A என்றால் என்ன?
  • ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான எளிய செயல்பாடு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம் title=

Central Government Employees: மாத ஓய்வூதியம் பெறும் நபரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் என்ன? இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மை என்ன? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Central Government Pensioners: ஓய்வூதியம் பெறுவோருக்கான எளிய செயல்முறை

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஒரு ஆன்லைன் செயல்முறையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் சிக்கலான காகித செயல்முறைகளை கடந்து சிரமமின்றி ஓய்வூதியத்திற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இந்த புதிய முறை நவம்பர் 6, 2024 இல் செயல்படுத்தப்பட்டது. இது, ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்கான விரைவான மற்றும் பயனுள்ள வழிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Online Pension Forms: ஆன்லைனில் ஓய்வூதிய விண்ணப்ப செயல்முறை

அரசு ஊழியர்கள் ஓய்வூதிய விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து தாமாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது ஆன்லைன் தளத்தின் அறிமுகத்தின் மூலம், ஓய்வூதியதாரர்கள் இப்போது தங்கள் விண்ணப்பங்களை பவிஷ்யா (Bhavishya) அல்லது e-HRMS போர்டல் மூலம் படிவம் 6-A (Form 6-A) என்ற ஒரே படிவத்தைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் ஓய்வு பெறும் ஊழியர்கள் Retiring Employees) தங்கள் தனிப்பட்ட விவரங்கள், வருங்கால வைப்பு நிதி கணக்கு அதாவது இபிஎஃப் கணக்கு (EPF Account) விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை ஒரே படிவத்தில் நிரப்புவதற்கு வசதியாக உள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் 186% ஊதிய உயர்வு, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

Form 6A: காகிதமற்ற புதிய அமைப்பின் நன்மைகள்

காகிதமற்ற புதிய ஆன்லைன் அமைப்பு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது காகித பணிகளின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஓய்வூதியத்தை செயலாக்க எடுக்கும் ஒட்டுமொத்த நேரத்தையும் மேம்பட்ட முறையில் குறைக்க உதவுகிறது. ஏனென்றால், படிவம் 6ஏ அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இனி ஓய்வூதியம் பெறுவோர் முழு டிஜிட்டல் முறையில் காகிதமற்ற முறையில் விண்ணப்பிக்கலாம். இந்த மாற்றம் ஓய்வூதியம் விரைவாகச் செயல்படுத்தப்படுவதையும், செலுத்துவதையும் உறுதி செய்கிறது. இனி இந்த செயல்முறை ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கலான செயல்முறையாக இல்லாமல் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

Form 6A: ஓய்வூதியப் படிவம் 6-A என்றால் என்ன?

- ஓய்வுபெறும் ஊழியர்களின் வசதிக்காக எளிமைப்படுத்தப்பட்ட ஓய்வூதியப் படிவம் 6A உருவாக்கப்பட்டுள்ளது.
- இது படிவம் 6, 8, 4, 3, A, Format 1, Format 9, FMA மற்றும் Zero Option Form ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
- இதற்காக, CCS ஓய்வூதிய விதிகள், 2021 இன் விதிகள் 53, 57, 58, 59, 60 இல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
- செலவினத் துறை, சட்டம் மற்றும் நீதித் துறை, கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் அகவுண்ட்ஸ், இந்தியக் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை. போன்ற அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்த பிறகு இந்தத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான எளிய செயல்பாடு

ஓய்வூதியதாரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட இயங்குதளமானது, வலுவான மற்றும் பயன்படுத்த எளிதான இடைமுகத்தை அளிக்கும். இந்த புதிய முறையின் மூலம், ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதியத் தாள்களை சேகரித்து சமர்ப்பிக்கும் சிக்கலான செயல்முறையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்த ஆன்லைன் முயற்சியின் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு சரியான நேரத்தில் ஓய்வூதிய வழங்கல் துவங்குவது உறுதி செய்யப்படுகின்றது. இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு நிதி ரீதியாக ஏற்படும் சில்லல்களும் தவிர்க்கப்படும். 

(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது)

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு EPFO வழங்கும் ரூ.50,000 கூடுதல் போனஸ் தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News