மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடந்த சில தினங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகப்பை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அருண் ஜெட்லிக்கு இந்த வார இறுதியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நோய்த்தொற்று ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை காரணமாக பொதுவெளியில் செல்வதை அவர் தவிர்த்து வருவதாகச் சொல்கிறார்கள். அதனால் வீட்டிலே தங்கியிருந்து இவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரகப்பை பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். இவருக்கு இந்த வாரம் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
I am being treated for kidney related problems & certain infections that I have contracted. I am therefore currently working from controlled environment at home. The future course of my treatment would be determined by the doctors treating me.
— Arun Jaitley (@arunjaitley) April 5, 2018
65 வயதான அமைச்சர் ஜெட்லிக்கு, கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த திங்கள் முதல் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான், சமீபத்தில் அவர் ராஜ்ய சபா எம்.பி-யாக பதவியேற்க வேண்டிய விழாவில் கூட கலந்துகொள்ளவில்லை.
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவருக்கு எளிதில் நோய் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளதால், வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனால், அவரது லண்டன் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு, ஜெட்லி செய்துகொண்ட உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் இந்த பிரச்னை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என அமைச்சருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இதை தொடர்ந்து அவருக்கு நாளை சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.