நடைப்பயிற்சி என்பது அனைவரும் பின்பற்றக் கூடிய மிக எளிமையான, பயனுள்ள உடற்பயிற்சி என்றால் மிகையில்லை. ஆனால், தினமும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வேகத்தில் நடப்பது சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தி, நடைப்பயிற்சி மீதான ஆர்வத்தை குறைத்து விடலாம். இந்நிலையில், நடைப்பயிற்சியை சுவாரஸ்சியமாக மாற்றும் ஒரு புதிய முறைதான் "6-6-6 விதி" . ஒருவருக்கு ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து மிக்க உணவுடன், உடல் செயல்பாடும் தேவை. உடல் சுறுசுறுப்பாக இருக்க நடைபயிற்சி மிகவும் உதவும். நடைபயிற்சி விதி 6-6-6 என்னும் புதிய நடைமுறை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நடைபயிற்சியின் 6-6-6 விதி என்றால் என்ன?
நடைப்பயிற்சியின் போது, ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் உங்கள் நடையின் வேகத்தையும், பாதையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை 6-6-6 விதி குறிக்கிறது. இதன் மூலம் உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் பயிற்சி கிடைத்து, மூளையும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். இது தசைகளுக்கும் நல்ல பயிற்சியாக அமையும். மேலும், ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் புதிய சூழல் கிடைப்பதால், மனதில் புத்துணர்ச்சி ஏற்பட்டு, சலிப்பு நீங்குகிறது. ஒரு புதிய நடை முறை. அதோடு, காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற இந்த நடை விதியில் பல நன்மைகள் உள்ளன. இந்த விதி மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாக புரிந்துகொள்வோம்.
6 நிமிட நடைபயிற்சி
இந்த விதியில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 6 நிமிடங்கள் நடக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த முறை நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பவர்களுக்கான சிறந்த பயிற்சி. இதில் அலுவலகங்களில் பணிபுரிபவர்களும் அடங்குவர். இப்படி தொடர்ந்து நடப்பதால், உடல் சுறுசுறுப்பாக இருப்பதோடு, ரத்த ஓட்டமும் மேம்படும். பிஸியாக இருப்பவர்கள் பின்பற்றக்கூடிய பொதுவான முறை இது. அதே நேரத்தில், நீங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி, அதிக நன்மைகளை விரும்பினால், நீங்கள் மற்றொரு முறையை முயற்சிக்கலாம்.
காலை 6 மணி நடை பயிற்சி
இதில், முதலில் நீங்கள் காலை 6 மணிக்கு முன் எழுந்திருக்க வேண்டும், பின்னர் 6 நிமிடங்கள் வார்ம்-அப் செய்ய வேண்டும். பிறகு 6 நிமிடங்களுக்கு உடலை குளிர்விக்க வேண்டும். இப்போது இதற்குப் பிறகு நீங்கள் தொடர்ந்து 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். காலை நடைப்பயிற்சி உடலின் மெட்டபாலிசத்தை பலப்படுத்துகிறது. நமது இதய ஆரோக்கியம் மேம்படும். காலை வேளையில் நடைப்பயிற்சி செய்வது சிறந்த கார்டியோவேஸ்குலர் பயிற்சி. தயம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. காலை நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.
மாலை 6 மணி நடை பயிற்சி
மாலை 6 மணிக்கு, காலையை போலவே, 30 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதில் தலா 6 நிமிடங்கள் வார்ம்-அப் மற்றும் கூல் டவுன் அமர்வும் அடங்கும். மாலை நடைப்பயிற்சி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தம் குறைந்து இரவில் தூக்கம் நன்றாக இருக்கும்.
6-6-6 நடைபயிற்சி விதியை பின்பற்றுவதினால் கிடைக்கும் பலன்கள்
1. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
2. தசைகள் வலுவடையும்.
3. உடல் பருமனை குறைக்க உதவும்.
4. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.
5. சிறந்த இதய ஆரோக்கியம்.
6. முதுகு மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ