How Actor Dhanush Is Always Lean : நம் கூடவே, ஒல்லியாக சிலர் இருப்பார்கள். இவர்களின் உருவத்தை பார்த்து நாம் பல சமயங்களில், “இவர் சரியாவே சாப்பிட மாட்டார் பாேல” என தப்புக்கணக்கு போட்டு விடுவோம். அவர்களில பலர், சரியாக சாப்பிடாததால் ஒல்லியான தேகத்துடன் வலம் வரலாம். ஆனால் ஒரு சிலர், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரி போல, 50 பரோட்டாக்களை அலேக்காக சாப்பிடுபவர்களாக இருப்பர். தனுஷ், அப்படிப்பட்டவர் இல்லை என்றாலும், தன் வயதுக்கு ஏற்றது போல கூட அல்லாமல், ஒரே உடல் எடையை பல ஆண்டுகளாக பராமரித்து வருகிறார். அது எப்படி? இவர் ஒல்லியாகவே இருக்க என்ன காரணம்?
மரபணு:
நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பதும், சாப்பிடவே இல்லை என்றாலும் உடல் பருமனுடன் காணப்படுவதும் நம் கைகளில் இல்லை. அது, நம் மரபணுவிலேயே இருப்பதாக இருக்கலாம். தனுஷ் ஒல்லியாக இருக்கவும் அப்படிப்பட்ட மரபியல் காரணங்கள் இருக்கலாம். அவரது மெட்டபாலிசம் வேகமாக இருப்பதால், எப்போதும் ஒல்லியாக இருக்க அது உதவலாம்.
டயட்:
தனுஷ், தனது சாப்பாட்டு விஷயத்திலும் ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பவராம். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கும் இவர், நொறுக்குத்தீனிகளும் சாப்பிடுவதே இல்லையாம். வீட்டில் தயாரித்த ஆரோக்கியத்தை தரும் உணவுகளை மட்டுமே இவர் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
வாழ்க்கைமுறை:
தனுஷ், தான் எந்த படங்களில் நடித்தாலும் அதற்கு ஏற்றார் போலவே தனது உடலையும் மனதையும் தயார் செய்து கொள்வாராம். இதற்காக தற்காப்பு பயிற்சிகள் மேற்கொள்வது, நடனம் ஆடுவது, குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். இதனால், அவர் எப்போதும் ஃபிட் ஆகவும் ஒல்லியான தேகத்துடனும் இருக்கிறாராம்.
தியானம்:
பல நேர்காணல்களில் தனுஷ் தனது மன அமைதி குறித்தும், தியானத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசியிருக்கிறார். இது, ஒட்டுமொத்த உடல் நலத்துக்கும் உதவும். இது, நமக்கு கவனச்சிதறல் ஏற்படாமலும் தடுக்குமாம்.
கார்டியோ உடற்பயிற்சிகள்:
தனுஷ், உடலை ஃபிட்டாக வைத்திருக்க கார்டியோ உடற்பயிற்சிகளை செய்வாராம். ரன்னிங் செல்வது, நீச்சல் பயிற்சி மேற்கொள்வது, சைக்ளிங் செல்வது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்வாராம்.
மேலும் படிக்க | 50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..
அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்:
தனது பசிக்கு மீறி அதிகமாக சாப்பிடுபவர்கள் பலர், உடல் எடை அதிகமானவர்களாக இருப்பர். அப்படி அதிகமாக சாப்பிடாதவர்கள், உடல் எடை குறைவாக இல்லை என்றாலும், கொஞ்சம் ஹெல்தியான தேகத்துடன் இருப்பவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர், தனுஷ். அதிகமாக சாப்பிடாமல் இருப்பதால், ஒல்லி தேகத்துடன் இருக்கின்றார்.
மனதிற்கும் உடலுக்குமான சமநிலை:
பல சமயங்களில், நம் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருப்பது, மன அழுத்தம். இதனால், அதிகம் சாப்பிடாதவர்களும் கூட உடல் எடை கூடுவர். இதை சமநிலையில் வைத்திருப்பவர் தனுஷ். மன நலனை சரியாக கவனித்து, உடல் நலனிலும் அக்கறை செலுத்துவதால், அவர் தன் உடலை கச்சிதமாக வைத்திருக்கிறார். தனுஷ், தன் உடலை கவனிக்க தனியாக டயட்டீஷியன் மற்றும் டிரைனரை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ