210 கி.மீ தள்ளி இருந்தாலும் தேடி வந்து தாக்கிய மனைவி! வசமாக சிக்கிய கணவன்!

வீட்டில் இருந்து 210 கி.மீ தொலைவில் தனது காதலியுடன் உல்லாசமாக இருக்க கணவன் திட்டமிட்டு இருந்தாலும், இதனை தெரிந்து கொண்ட மனைவி நேராக சென்று தாக்கி உள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Nov 18, 2024, 07:06 AM IST
    காதலியுடன் சிக்கிய சர்பஞ்ச் வீடியோ வைரல்.
    நடுரோட்டில் காரை நிறுத்தி சண்டை.
    முறையான புகார் எதுவும் இல்லை.
210 கி.மீ தள்ளி இருந்தாலும் தேடி வந்து தாக்கிய மனைவி! வசமாக சிக்கிய கணவன்! title=

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பளம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் தனது காதலியுடன் ஹோட்டலில் நேரத்தை செலவிட தனது வீட்டில் இருந்து சுமார் 210 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாக அவரது மனைவி அவரை கண்காணித்து வருவதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அவர் தனது காதலியுடன் ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது, ​​தனது காருக்கு நேராக மனைவி நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அடிக்கடி தனது கணவர் யாருடனோ போனில் பேசுவதை பார்த்து சந்தேகப்பட்ட மனைவி அப்போது இருந்தே இவரை பின்தொடர்ந்துள்ளார். எனவே, அவர் வேறொரு பெண்ணுடன் ஒரு ஹோட்டலில் இருப்பதை அறிந்ததும், அவரை கையும் களவுமாக பிடிக்க நேரடியாக சென்றுள்ளார்.

மேலும் படிக்க | நடு ரோட்டில் முடியை பிடித்து சண்டை போடும் பெண்கள்! என்ன பிரச்சனை? வைரல் வீடியோ..

ஹோட்டல் அறைக்கு வெளியே அதிர்ச்சி சம்பவம்

வெளியான தகவலின்படி, தனது கணவர் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரும் வரை அவரது மனைவி காத்து கொண்டு இருந்துள்ளார். கடைசியாக கிராம நிர்வாக அதிகாரி வேறொரு பெண்ணுடன் வெளியே வந்தபோது, ​​மிகவும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் நேராக அவரது காருக்கு முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கி உள்ளார். தனது கணவர் மற்றும் கள்ளக்காதலி என இருவரையும் கையும் களவுமாக பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மற்றொரு பெண் செய்வதறியாது காருக்குள் அமர்ந்து இருந்தார்.

வைரல் வீடியோ

ஹோட்டலுக்கு வெளியே இரண்டு பெண்கள் சண்டையிடும் வீடியோ இணையத்தில் அதிகம் வைரலானது. மேலும் ஏராளமான மக்கள் அதை ஷேர் செய்து வருகின்றனர். இந்த சம்பளம் நடந்து கொண்டிருக்கும் போது, ​​கிராம நிர்வாக அதிகாரி காரில் இருந்தபடியே முகத்தை கைகளால் மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவரது மனைவியுடன் வந்தவர்கள் காருக்குள் இருந்த பெண்ணை வெளியே கொண்டு வந்து சரமாரியாக தாக்கினர். இந்த முழு வீடியோவும் ஆன்லைனில் அதிகம் பகிரப்படுகின்றன. சர்பானந்தா ஜிதேந்திர மாலி என்ற நபர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார், ஆனால் அந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பின்னர் மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு தற்போது நான்கு குழந்தைகள் இருக்கும் நிலையில், வேறொருவரை மூன்றாவது திருமணம் செய்ய விரும்புவதாக அவரது இரண்டாவது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் அவர் தன்னை நன்றாக நடத்தவில்லை என்றும் அவரது மனைவி குற்றம் சாட்டி உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி நரேந்திர யாதவ் கூறுகையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் வரவில்லை. இந்த சம்பவம் அந்த நபரின் மனைவி புகார் தெரிவிக்க முன் வந்தால், போலீசார் சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும் படிக்க | தாயை பிரிந்த குட்டி யானை! பேருந்தை வழிமறித்து உதவி கேட்கும் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News