7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். டிஏ உயர்வுக்கான பரிசு அவர்களுக்கு தீபாவளிக்கு முன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்பை அரசு அறிவிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டிஏ உயர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு அக்டோபர் 18 ஆம் தேதி அறிவித்தது.
மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) டிஏ உயர்வுக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது என்றே கூறலாம். இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது. டிஏ ஹைக் கணக்கீடுகள் செய்யப்பட்டு விட்டதாகவும், மத்திய அரசு ஒப்புதலுக்காக இனி இது அனுப்பப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ACIPI Index
அகவிலைப்படி, தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் டிஏ, டிஆர் -இல் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணமும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணமும் தீர்மானிக்கப்படுகின்றன.
ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்தது?
ஜனவரி 2024 இல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 4% அதிகரிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) 50% ஆக உள்ளன. இதற்கான அறிவிப்பு 2024 -இல் வந்தது.
Dearness Allowance: ஜூலை 2024 -இல் டிஏ எவ்வளவு அதிகரிக்கும்?
2024 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 அகவிலைப்படி 3%-4% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி அறிவிப்பு எப்பொழுது வந்தாலும் ஜூலை முதலான டிஏ அரியர் (DA Arrears) தொகை ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
DA, DR அறிவிப்பை வெளியிடுவதில் அரசு ஏன் தாமதம் காட்டுகிறது?
அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதில் அரசு காட்டும் தாமதம் ஊழியர்களையும் ஓய்வூதியதாரர்களையும் பாதித்துள்ளது. ஊழியர் சங்கங்களும் இது குறித்து அதிருப்தியை தெரிவித்து வருகின்றன. ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு முன்னர் செப்டம்பர் மாதமே வந்துவிடும் என்றும் இப்போதெல்லாம் அதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறினார். தாமதமாக இதை அறிவிப்பதன் மூலம் அரசாங்கமே நல்ல லாபம் ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி அதிகரிக்கப்படும்போது அரசாங்கத்தின் மீது பொருளாதார சுமை அதிகமாகிறது. இந்த சூழ்நிலையில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தாமதமாக இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிடுகிறது. இந்த காலகட்டத்தில் இந்தப் பணம் அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்டு அதற்கு நல்ல வட்டி கிடைக்கிறது. அரசு டிஏ ஹைக் அறிவிப்பை வெளியிட தாமதப்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
எப்படியும் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி அதிகரிப்புக்கான நல்ல செய்தியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வந்தவுடன் அகவிலைப்படி அதிகரிப்பால் ஏற்பட்ட சம்பள உயர்வு (Salary Hike),டிஏ அரியர் தொகை என ஊழியர்களுக்கு மிகப்பெரிய உயர்வு இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. )
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ