ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களே.. இதை செய்ய கட்டாயம் மறக்காதீர்கள்..

Ration Card Latest News: ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் தங்கள் இ-கேஒய்சியை (e-KYC) முடிப்பதற்கான கடைசித்தேதி அறிவிப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 14, 2024, 10:00 AM IST
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களே.. இதை செய்ய கட்டாயம் மறக்காதீர்கள்.. title=

Ration Card eKYC Mandatory: அனைத்து ரேஷன் கார்டுகளுடனும் ஆதார் எண்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்கள் விநியோகம் செய்வதில் இன்னும் சில பிரச்சனைகள் இருப்பதால், 100 சதவீதம் ரேஷன் பொருட்கள் சரியான் நபருக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்புவெளியிடப்பட்டு உள்ளது. 

குடும்ப அட்டை e-KYC

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் மலிவு விலையிலும், இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் தொடந்து ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளவும், கள்ளச்சந்தையை கட்டுப்படுத்தவும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்கள்  e-KYC சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டு eKYC கால அவகாசம் நீட்டிப்பு

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (Ration Card eKYC-ஐ) செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடுவை ஆரம்பத்தில் அக்டோபர் 31 ஆகும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்சனைகள், விடுமுறை காரணமாக பலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். மேலும் பலர் இன்னும் eKYC செயல்முறையை முடிக்கவில்லை. இந்நிலையில், மேலும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கைகளை பரிசீலித்து கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

ரேஷன் கார்டு இ-கேஒய்சி கடைசி தேதி

ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் தங்கள் இ-கேஒய்சியை (e-KYC) முடிப்பதற்கான கடைசித்தேதி டிசம்பர் 31 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்திற்குள் கட்டாயம் இந்த பணியை முடிந்துகக் கொள்ளுங்கள். இல்லையென்றால் ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது ரேஷன் அட்டை மூலம் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் தடைப்படலாம்.

ரேஷன் கார்டு கள்ளச்சந்தை

ரேஷன் கார்டு இ-கேஒய்சி அப்டேட் செய்வதன் மூலம் உணவு தானிய விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வேண்டும் எனவும், தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் கள்ளச்சந்தையை தடுப்பதையும், உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யப்படும். 

ரேஷன் அட்டை e-KYC அப்டேட் எங்கே செய்வது?

ரேஷன் கார்டு eKYC-ஐ  அப்டேட் செய்யும் செயல்முறை எளிமையானது. தேவையான ஆவணங்களுடன் உங்கள் அருகிலுள்ள பொது விநியோக அமைப்பு (PDS) கடை அல்லது ஆன்லைன் மையத்திற்கு சென்று உங்களுக்கான காலக்கெடுவிற்கு முன் கட்டாயம் ரேஷன் கார்டு eKYC-ஐ அப்டேட் அப்டேட் செய்துக்கொள்ளுங்கள்..

ரேஷன் அட்டை eKYC-ஐ அப்டேட் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன?

ரேஷன் கார்டு eKYC-ஐ  அப்டேட் செய்ய ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, மொபைல் எண் கட்டாயம் தேவை.

ரேஷன் அட்டை eKYC அப்டேட் எப்படி செய்வது?

தேவையான ஆவணங்களை வைத்துக்கொள்ளவும்.
ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம்.
அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை தேவை.
உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
eKYC விருப்பத்தை கிளிக் செய்யவும்
ரேஷன் கார்டு எண் மற்றும் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். 
ரேஷன் கார்டு அப்டேட் செய்ய OTP ஐ உள்ளிடவும்.

மேலும் படிக்க - ரேஷன் கார்டு இருந்தால் கலைஞர் உரிமைத் தொகை - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் படிக்க - ரேஷன் கார்டு இருந்தாலே மாதம் 1000 ரூபாய்... மகளிர் உரிமைத் தொகையில் லேட்டஸ்ட் அப்டேட்

மேலும் படிக்க - Ration Card | ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலா? இதை பாலோ பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News