இறந்தவரது பான் ஆதார் கார்டு தொடர்பான விதிகள்... உறவினர்கள் செய்ய வேண்டியது என்ன...

பான் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் முக்கிய நிதி பரிவர்த்தனை எதையும் செய்ய முடியாது. ஆதாரும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 26, 2024, 04:24 PM IST
  • ஒருவர் மரணித்த பிறகு, அவரது அடையாள ஆவணங்களை என்ன செய்ய வேண்டும்?
  • வங்கில் வேலை முதல், அரசு திட்டங்களின் பலனைப் பெற என எல்லா இடங்களிலும் ஆதார் அட்டை தேவை.
  • வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற பல ஆவணங்களும் நமக்கு பல வகைகளில் தேவைப்படுகின்றன.
இறந்தவரது பான் ஆதார் கார்டு தொடர்பான விதிகள்... உறவினர்கள் செய்ய வேண்டியது என்ன... title=

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் பான் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாது. வருமான வரி தாக்கல் முதல் பணம் தொடர்பான பரிவர்த்தனை அனைத்திற்கும் பான் அட்டை தேவை. ஆதாரும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணம். உங்கள் வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதும் கட்டாயம் என்ற விதியும் உள்ளது. வங்கில் வேலை முதல், அரசு திட்டங்களின் பலனைப் பெற என எல்லா இடங்களிலும் ஆதார் அட்டை தேவை. இதேபோல், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற பல ஆவணங்களும் நமக்கு பல வகைகளில் தேவைப்படுகின்றன. இவை அடையாளச் சான்றாக மட்டுமல்லாமல், முகவரிச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, கிட்டத்தட்ட அனைவரிடமும் மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் இருக்கும்.

இந்நிலையில், ஒருவர் மரணித்த பிறகு, இந்த ஆவணங்களை என்ன செய்ய வேண்டும்?... இந்த ஆவணங்கள் தானாக ரத்து செய்யப்படுகிறதா அல்லது இறந்தவரின் உறவினர்கள் அவற்றை ரத்து செய்ய வேண்டுமா?... இன்று இது தொடர்பான விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

பான் கார்டு (PAN Card)

வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து டிமேட் கணக்கைத் திறப்பது வரை பல நோக்கங்களுக்காக பான் கார்டு தேவைப்படுகிறது. ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் இறந்தவரின் பான் அட்டையை ஒப்படைக்க வேண்டும். இந்த வேலையை செய்ய அவர்கள் வருமான வரித்துறையை தொடர்பு கொள்ள வேண்டும். பான் கார்டு வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, பான் கார்டை ஒப்படைப்பதற்கு முன், இறந்தவரின் அனைத்து கணக்குகளையும் மற்றொரு நபரின் பெயருக்கு மாற்ற வேண்டும் அல்லது மூட வேண்டும். ஏனெனில், பான் கார்டை ஒப்படைத்த பிறகு, அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தில் சிக்கல் ஏற்படலாம்.

ஆதார் அட்டை (Aadhaar Card)

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI) தற்போது இறந்தவரின் ஆதார் அட்டையை ரத்து செய்யவோ அல்லது ஒப்படைக்கவோ எந்த வித விதியோ செயல்முறையோ இல்லை. ஆனால், ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, இறந்தவரின் குடும்பத்தினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, இறந்தவரின் உறவினர்கள் அவரது ஆதார் அட்டையை லாக் செய்யலாம் பூட்டலாம்.

ஆதார் அட்டையை லாக் செய்ய நீங்கள் செய்ய வேண்டியவை (How To lock the Aadhaar Card)

1. ஆதார் அட்டையை லாக் செய்ய முதலில் www.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. இணையதளத்திற்குச் சென்ற பிறகு, 'My Aadhaar' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'Aadhaar Services' என்பதைக் கிளிக் செய்யவும்.

3. அதன் பிறகு Lock/Unlock Biometrics என்பதைக் கிளிக் செய்யவும்.

4. இதில் 12 இலக்க ஆதார் எண் மற்றும் கொடுக்கப்பட்ட கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

5. பின்னர் Send OTP என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதைச் செய்த பிறகு, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு OTP வரும், அதை உள்ளிடவும்.

6. இதைச் செய்த பிறகு, Lock/Unlock Biometrics செய்வதற்கான விருப்பத்தைக் காண்பீர்கள்.

7. Lock ஆப்ஷனை கிளிக் செய்தவுடன், இறந்தவரின் பயோமெட்ரிக் டேட்டா லாக் செய்யப்படும்.

8. இது தவிர, இறந்தவர் ஏதேனும் அரசுத் திட்டம் அல்லது மானியத்தில் பயன் பெற்று, அது ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதனால் இறந்தவரின் பெயரை அந்த திட்டத்தில் இருந்து நீக்கலாம்.

மேலும் படிக்க | Aadhaar Card: ஆதார் அட்டையில் இத்தனை வகைகளா... உங்களுக்கு ஏற்றது எது...

வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)

வாக்காளர் அடையாள அட்டை மூலம் மட்டுமே நமக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கிறது. ஒருவர் இறந்த பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் இறந்தவரின் வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்யலாம் (How To cancel the voter ID). அதை ரத்து செய்ய தேர்தல் அலுவலகத்திற்கு சென்று படிவம்-7ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த அட்டை ரத்து செய்யப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும்.

பாஸ்போர்ட் (Passport)

ஆதார் அட்டையைப் போலவே, பாஸ்போர்ட்டை ரத்து செய்யவோ அல்லது ஒப்படைக்கவோ எந்த விதியோ அல்லது செயல்முறையோ இல்லை. ஆனால் ஒவ்வொரு பாஸ்போர்ட்டும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே, இறந்தவரின் பாஸ்போர்ட்டை அதன் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை குடும்பத்தினர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதனால் யாரும் அதனை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பை தடுக்கலாம்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News