கடந்த 2 நாட்களாக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்றது. சில ஸ்டார் பிளேயர்கள் ஏலத்தில் விற்பனை ஆகாமல் போய் உள்ளனர். அதே சமயம் ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் போன்றவர்களுக்கு ஜாக்பார்ட் அடித்துள்ளது. இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த 13 வயதே ஆன கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் வாங்கப்பட்ட இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் 2வது நாளில் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ராகுல் டிராவிட் இவரை ஏலத்தில் எடுக்க டெல்லி அணியுடன் போட்டி போட்டார்.
மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
2011ம் ஆண்டு பிறந்த வைபவ் சூர்யவன்ஷி அவரது 4 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட துவங்கி உள்ளார். வைபவின் தந்தை சஞ்சீவ் அவரின் கிரிக்கெட் திறமையை புரிந்து கொண்டு தனது வீட்டின் பின்புறம் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்துள்ளார். பின்பு தனது 9 வயதில் வைபவ் சூர்யவன்ஷி சமஸ்திபூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்துள்ளார். அங்கு அவரின் திறமையை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வைபவ் சூர்யவன்ஷி பீகார் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் தனது 12 வயதில் விளையாடினார். மொத்தம் 5 போட்டிகளில் 400 ரன்களை அடித்து அசத்தினார்.
VAIBHAV SURYAVANSHI has just landed an @IPL deal at 13! Talk about a childhood dream coming true! @rajasthanroyals are investing ₹1.1 Cr in this young gun, and we can't wait to see him shine! #TATAIPLAuction pic.twitter.com/bUg24QB3S8
— Suvranil Singha Chowdhury (@SuvranilSinghaC) November 25, 2024
"கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். விஜய் மெர்ச்சன்ட் டிராபிக்காக 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் எனது பெயர் சேர்க்கப்பட்டது. இருப்பினும் வயது காரணமாக என்னை காத்திருப்பில் வைத்திருந்தனர். பிறகு முன்னாள் ரஞ்சி வீரர் மணீஷ் ஓஜாவின் கீழ் பயிற்சி பெற தொடங்கினேன். அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். தற்போது நான் நிறைய கற்று கொண்டுள்ளேன், அதற்கு அவர்தான் காரணம்" என்று வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
தனி இடத்தை பிடித்த வைபவ் சூர்யவன்ஷி
தனது 12 வயதில் பீகார் அணிக்காக அறிமுகமான வைபவ், சமீபத்தில் சென்னையில் நடந்த நான்கு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய U-19 அணிக்கு எதிராக 58 பந்துகளில் சதம் அடித்தது அசத்தினார். கடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா B U-19 அணியில் முக்கிய வீரராக இருந்தார். மேலும் இந்தியாவின் U-19 இந்தியா ஏ அணியிலும் இடம்பெற்றார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பாட்னாவில் மும்பைக்கு எதிராக பீகாரின் ரஞ்சி டிராபி 2023-24 எலைட் குரூப் பி போட்டியில் விளையாடினார். இளம் வயதில் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டுள்ள நிலையில் ராகுல் ட்ராவிட் அவரை ராஜஸ்தான் அணியில் ஏலத்தில் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பந்த்! எத்தனை கோடி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ