Weight Loss Drink: கொழுப்பு கரைய... தொப்பை குறைய... காபி - டீக்கு பதிலாக.. இவற்றை குடிங்க

Weight Loss Drinks: காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி அருந்துவதற்கு பதிலாக, சில வெயிட் லாஸ் பானங்களை அருந்தத் தொடங்கினால் உடல் எடை இரண்டு மடங்கு வேகமாக குறையும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். 

ஒரு நாளை தொடங்கும் போது, காபின் நிறைந்த டீ காபிக்கு பதிலாக, ஆரோக்கியமான பானத்துடன் தொடங்கினால், நாள் முழுவதும் உடலில் அதிக ஆற்றல் இருக்கும் என்பதோடு, சில காலைப் பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாகப் பராமரிக்க உதவும். 

1 /9

நம்மில் பலருக்கு, ஒரு கப் டீ அல்லது காபியுடன் நாளைத் தொடங்கும் வழக்கம் உள்ளது. தேநீர் மற்றும் காபியில் காஃபின் உள்ளது என்பதோடு, அதோடு அதில் சேர்க்கப்படும் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது. எனவே அதனை தவிர்ப்பது நல்லது.

2 /9

வெயிட் லாஸ் பானங்கள்: காலையில் நாம் குடிக்கும் பானம், வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதாகவும், குடலில் தங்கி உள்ள கழிவுகளை சுத்தமாக வெளியேற்றும் ஆற்றல் பெற்றதாகவும் இருக்க வேண்டியது அவசியம். செரிமானம் சிறப்பாக இருப்பதோடு, உடலில் இருந்து கழிவுகள் வெளியேறினால் தான், உடல் பருமன் குறையும்.  

3 /9

எலுமிச்சை - தேன்: காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் சிறந்த பானம், விரும்பினால், ஒரு சிட்டிகை கருமிளகு தூளையும் சேர்க்கலாம். எலுமிச்சையில் உள்ள அஸ்கார்பிக் அமிலம், உடலில் இருக்கும் கொழுப்பை குறைத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

4 /9

சீரக நீர்: அகத்தை சீர் செய்யும் ஆற்றல் கொண்ட சீரக நீர் மிகச்சிறந்த மூலிகை பானமாகும். சீரகத்தில் ஆல்டிஹைட் மற்றும் தைமோகுவினோன் போன்ற கலவைகள் நிறைந்துள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றவை. இது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி மூட்டுவலி மற்றும் முழங்கால் வலி போன்ற பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.

5 /9

நெல்லிக்காய் ஜூஸ்: வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை தூண்டி, அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதை தினமும் காலையில் குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடைகிறது.    

6 /9

சோம்பு நீர்: ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் சோம்பு என்னும் பெருஞ்சீரகம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை தூண்ட உதவும். பசியைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. உடலில் இருந்து அனைத்து நச்சுகள் மற்றும் அழுக்குகளை அகற்ற உதவுகிறது.

7 /9

வெந்தய நீர்: ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் இந்த வெந்தயத்தை முதலில் குடித்து வந்தால் நல்ல பலன கிடைக்கும். வெந்தயம் உடல் பருமனை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதனுடன் சர்க்கரை நோயும் சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.

8 /9

இலவங்கப்பட்டை நீர்: வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட அல்லது இலவங்க பட்டை தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்துவதால், தொப்பை கொழுப்பு வேகமாக கரையும். அல்லது இலவங்கப்பட்டையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து பின் காலையில் அதை குடிக்கலாம்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.