ஆதார் எண் இல்லாமலும் e-Aadhaar டவுன்லோட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ

e-Aadhaar Download: UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். ஆதாரை பதிவிறக்கம் செய்ய 12 இலக்க ஆதார் எண் அல்லது 28 இலக்க பதிவு அடையாள எண் தேவை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 7, 2022, 07:15 PM IST
  • ஆதார் எண் இல்லாமல் இ-ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி?
  • இ-ஆதாரைப் பதிவிறக்க, முதலில் பதிவு ஐடியை மீட்டெடுக்க வேண்டும்.
  • பதிவு ஐடியைப் பெற, முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
ஆதார் எண் இல்லாமலும் e-Aadhaar டவுன்லோட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ title=

ஆதார் எண் இல்லாமல் இ-ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி: இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் சொத்து வாங்குவது வரை, மருத்துவமனையில் அனுமதி பெறுவது முதல் பயணம் செய்வது வரை அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு ஐடி சான்றாக தேவைப்படுகிறது. இதுமட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதற்கும் ஆதார் அவசியம். அத்தகைய சூழ்நிலையில், இந்த 12 இலக்க ஆதார் எண் மிகவும் முக்கியமானது. ஆனால் அதார் அட்டை தொலைந்துவிட்டால், மக்கள் அதிக சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆதார் அட்டை தொலைந்து விட்டால், தேவைப்பட்டால், UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று யார் வேண்டுமானாலும் ஆதாரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆதாரை பதிவிறக்கம் செய்ய 12 இலக்க ஆதார் எண் அல்லது 28 இலக்க பதிவு அடையாள எண் தேவை. உங்கள் ஆதார் காணாமல் போன சூழலில், அதன் எண் அல்லது பதிவு அடையாள எண் உங்களிடம் இல்லையென்றால், கவலைப்படத் தேவையில்லை. இந்த எண் இல்லாமலும் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். இ-ஆதாரைப் பதிவிறக்க, முதலில் பதிவு ஐடியை மீட்டெடுக்க வேண்டும் ( Enrolment ID Retrieve).

Enrolment ID பெறுவது எப்படி:

- பதிவு ஐடியைப் பெற, முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பிறகு உங்கள் மொபைல் போனில் Get Aadhaar ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு Enrollment ID Retrieve விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- உங்களின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு Send OTP விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும், அதை உள்ளிடவும்.
- பிறகு உங்கள் எண்ணில் என்ரோல்மென்ட் ஐடி அல்லது ஆதார் எண் கிடைக்கும்.

மேலும் படிக்க | ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ 

ஆதாரை இப்படி பதிவிறக்கம் செய்யுங்கள்:

- ஆதாரை பதிவிறக்கம் செய்ய, முதலில் ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

- அதன் பிறகு 'டவுன்லோட் ஆதார்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

- இதற்குப் பிறகு உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு ஐடியை உள்ளிடவும்.

- அதன் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.

- அதன் பிறகு OTP ஐ உள்ளிடவும்.

- உங்கள் இ-ஆதார் பதிவிறக்கம் செய்யப்படும். அதை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க | ஆதார் அட்டையை வைத்து பேங்க் பேலன்சை எவ்வாறு சரிபார்ப்பது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News