16 நாட்களில் 12000 பேருக்கு வேலை வாய்ப்பளித்த அந்த நிறுவனம் எது தெரியுமா

80 சதவிகித தொழிலாளர்கள் இரண்டு நாட்களுக்கு குறைக்கப்பட்ட பின்னர், நாங்கள் மிகவும் பிரச்சனைக்கு உள்ளானோம் என்கிறது பிக் பாஸ்கெட் நிறுவனம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 30, 2020, 04:22 PM IST
  • லாக்டௌன் காரணமாக பிக் பாஸ்கெட் நிறுவனம் 80 சதவீத ஊழியர்களை இரண்டு நாட்களுக்குள் இழந்தது.
  • பின்னர், 16 நாட்களில் 12,000 க்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
  • தற்போது இன்னும் சிலரை பணியமர்த்தும் முனைப்புடன் உள்ளது.
16 நாட்களில் 12000 பேருக்கு வேலை வாய்ப்பளித்த அந்த நிறுவனம் எது தெரியுமா title=

மார்ச் மாதத்தில் நாடு தழுவிய லாக்டௌன் காரணமாக பிக் பாஸ்கெட் நிறுவனம் தனது ஊழியர்களில் 80 சதவீத ஊழியர்களை இரண்டு நாட்களுக்குள் இழந்தது. ஆனால் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் கொண்டிருந்த வைராக்கியம் காரணமாக, நிறுவனம் மீண்டும் ஒரு வேகமான பாதையில் தன் பணிகளைத் தொடங்கியுள்ளது.

பிக் பாஸ்கெட் (Big Basket) நிறுவனம், 16 நாட்களில் 12,000 க்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இந்த வழியில் நிறுவனம் முனைப்போடு தன் பணிகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரி மேனன் இந்த தகவலை வழங்கினார்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) இந்த தகவலை தெரிவிக்கும்போது, “80 சதவிகித தொழிலாளர்கள் இரண்டு நாட்களுக்கு குறைக்கப்பட்ட பின்னர், நாங்கள் மிகவும் பிரச்சனைக்கு உள்ளானோம். ஏனென்றால் ஆர்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. நாங்கள் 16 நாட்களில் 12,300 பேரை வேலைக்கு அமர்த்தினோம். இதன் மூலம் நாங்கள் எங்கள் சக்தியை வெளிப்படுத்தினோம்.” என்று கூறினார். மேனன் "ஈஷா இன்சைட்: வெற்றியின் டி.என்.ஏ" என்ற மூன்று நாள் நிகழ்ச்சியின் ஆன்லைன் அமர்வில் இதை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் நிறுவனத்தின் தரவு கசிந்தது

சமீபத்தில், பிக்பாஸ்கெட் தரவு கசிந்தது பற்றிய செய்தி வந்தது. சைபர் உளவு நிறுவனமான Saabil-ன் கூற்றுபடி, தரவு கசிவு காரணமாக, பிக் பாஸ்கெட்டின் சுமார் 2 கோடி பயனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்தன. இது குறித்து நிறுவனம்,

பெங்களூரில் (Bengalore) உள்ள சைபர் கிரைம் கலத்தில் புகார் அளித்துள்ளதாகவும், சைபர் நிபுணர்கள் இது குறித்து விசாரித்து வருவதாகவும் செய்தி தெரிவிக்கிறது.

பிக் பாஸ்கெட்டின் தரவை ஒரு ஹேக்கர் (Hacker) ரூ .30 லட்சத்திற்கு விற்க முனைந்துள்ளதாக சபீல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: Netflix Stream Fest: டிசம்பரில் இந்த நாட்களில் Netflix முற்றிலும் இலவசம், விவரம் உள்ளே

2 கோடி பயனர்களின் தரவு கசிந்தது

டார்க் வெப்பை வழக்கமாக கண்காணிக்கும் போது, ​​சைபர் கிரைம் (Cyber Crime) சந்தையில் பிக்பாஸ்கெட் தரவுத்தளம், 40,000 டாலருக்கு விற்கப்படுவதாக சாபிலின் ஆராய்ச்சி குழு கண்டுபிடித்ததாக கூறப்பட்டது. SQL கோப்பு அளவு சுமார் 15GB ஆகும். இதில் சுமார் 20 மில்லியன் பயனர்களின் தரவு உள்ளது.

இந்தத் தரவில் பயனர்களின் பெயர்கள், மின்னஞ்சல் ஐடி, கடவுச்சொல் ஹாஷ்கள், தொடர்பு எண்கள் (மொபைல் போன் மற்றும் தொலைபேசி, முகவரி, பிறந்த தேதி, இருப்பிடம் மற்றும் ஐபி முகவரி) ஆகியவை உள்ளன என்று கூறப்படுகிறது. Saabil பாஸ்வர்ட் பற்றி கூறியுள்ளது. பிக் பாஸ்கெட் நிறுவனம் OTP முறையை பயன்படுத்துகிறது. இது ஒவ்வொரு முறையும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 1 ஆம் தேதி முதல் UPI பரிமாற்றத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News