நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தார். 1996ல் பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடிகராக பணியாற்றி உள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்ததன் மூலம் அனைவரது மத்தியிலும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றார் சீமான். இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை நிறுவி அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வேலுப்பிள்ளை பிரபாகரனை தனது முதன்மையான செல்வாக்காகவும், தமிழ் தேசியம் என்பதையும் தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்.
மேலும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சீமான் பேச்சு
இலங்கையில் பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்தது தொடர்பாக சீமான் பல விஷயங்களை பேசியுள்ளார். அவற்றில் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. பிரபாகரனுடன் ஆமை கறி சாப்பிட்டேன் போன்றவை அதில் குறிப்பிடத்தக்கது. மேலும் சீமான் மேடையில் பேசும் பல விஷயங்கள் அவருக்கு கணிசமான பின்னடைவையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் பெரியார் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படங்கள் அனைத்து இடங்களிலும் இடம் பெறும். இந்நிலையில் இந்த படம் டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டது என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்
வெங்காயம் மற்றும் பயாஸ்கோப் போன்ற படங்களை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் சீமான் மற்றும் பிரபாகரன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. "நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக பணி செய்து வந்தேன். அப்போது நண்பர் ஒருவர் பிரபாகரன் மற்றும் சீமான் புகைப்படங்களை கொடுத்து இரண்டையும் ஒன்றாக மேட்ச் செய்து தருமாறு கேட்டார். எதற்காக என்று கேட்டபோது, சர்பிரைஸ் கிப்ட் கொடுப்பதற்காக என்று கூறினார். அதனால் நானும் எடிட் செய்து கொடுத்தேன். ஆனால் அதன்பிறகு பிரபாகரன் குறித்து சீமான் சொல்லும் சில கதைகள் என்னை வருத்தமடைய செய்தது.
என்னிடம் எடிட் செய்து கொடுக்க சொன்ன நண்பரிடம் இது பற்றி பிறகு கேட்டேன். ஆனால் அவர், நாம் எடிட் செய்த புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவர் உருவாகி உள்ளார் என்று சந்தோசமாக கூறினார். இந்த புகைப்படம் வெளியான காலகட்டத்தில் இது எடிட் செய்யப்பட்டது என்ற தகவல் வெளியானது. ஆனால் நான் இதை பற்றி யாரிடமும் சொன்னது இல்லை. சீமான் பிரபாகரனை சந்தித்தாரா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்த புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான். நான் வந்தபிறகு தான் அனைவரும் பிரபாகரன் பெயரை சொல்ல முடிந்தது என்று சீமான் கூறுகிறார். அந்த புகைப்படத்தை எடிட் செய்தவன் என்ற முறையில் எனக்கு சில சமயம் வருத்தமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ