அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! பட்ஜெட்டில் காத்திருக்கும் 3 பரிசுகள்!

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தவில்லை.  ஜூலை 2021 முதல் அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தியது.  

Written by - RK Spark | Last Updated : Jan 28, 2023, 10:11 AM IST
  • இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
  • ஜூலை 2021 முதல் அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தியது.
  • ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! பட்ஜெட்டில் காத்திருக்கும் 3 பரிசுகள்!  title=

இந்த புத்தாண்டு முதல் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது, இந்த தடவை எப்படியும் அரசாங்கம் தனது ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று ஊழியர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  பொதுவாக அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டு முறை  ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை (டிஏ) அதிகரிக்கிறது.  பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் இந்த முறை அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பம்பர் செய்தி!! இனி இந்த ஊழியர்களுக்கு மீண்டும் Old Pension Scheme: அறிவிப்பு வெளியானது!

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தவில்லை.  அதன்பிறகு, ஜூலை 2021 முதல் அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தியது.  இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய 18 மாத நிலுவைத் தொகையை  வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  மறுபுறம்  ஃபிட்மென்ட் பேக்டரையும்  அதிகரிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  2023ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஃபிட்மென்ட் பேக்டர் விகிதம் தற்போது 2.6 சதவீதமாக உள்ளதால், அதை 3.7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்தினால் ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும்.  இந்த உயர்வுக்குப் பிறகு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.

மேலும், பணியாளர்கள் பெறும் போனஸில் சேருவதற்கான வரிவிதிப்பு விதியை திருத்த வேண்டிய அவசியம் உள்ளது. போனஸைப் பெற்ற பிறகு நிறுவனத்தை விட்டு வெளியேறும் நபர்கள், முன்னரே ஓப்புக்கொள்ளப்பட்ட நேரத்திற்கு முன்பே வெளியேறினால், தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற விதிகள் உண்டு. பொதுவாக, ஊழியர்களுக்கு, அவர்கள் வருமான வரிக்கு நிகரான தொகையைப் பெறுகிறார்கள். இருப்பினும், ஒப்புக்கொள்ளப்பட்ட நேரத்திற்கு முன்பே அவர்கள் வெளியேறினால், போனஸ் பணத்தை முழுவதுமாக திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே, போனஸ் தொகைக்கான வரிவிதிப்பில் மாற்றம் தேவை.

மேலும் படிக்க | LIC Recruitment 2023: மிஸ் பண்ணாதிங்க... LIC-ல் மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News