Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) ஜூலை 23ஆம் தேதி நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான எண்டிஏ அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் இது குறித்த எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. விவசாயம், ஆட்டோமொபைல், சுகாதாரம், வருமான வரித்துறை உள்ளிட்ட பல துறைகளில் மிகப்பெரிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சுகாதாரத் துறை
குறிப்பாக சுகாதாரத்துறையில் (Health Sector) அதிக அளவிலான எதிர்பார்ப்புகள் உள்ளன. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அதிக நிதியுதவி கிடைத்ததால் இந்த முழு பட்ஜெட்டிலும் இந்தத் துறைக்கான பல அறிவிப்புகள் இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Union Budet 2024: சுகாதாரத் துறையில் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்ன?
அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு
பெரும்பாலான ஏழை குடும்பங்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு அவர்களால் மலிவு விலையில் நல்ல சிகிச்சையை பெற முடிகின்றது. இருப்பினும் மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால் அழுத்தம் ஏற்படுகின்றது. இதை சரி செய்ய அத்தியாவசிய மருந்துகள் மீதான வரியை நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் குறைப்பார் என்றும், இந்த மருந்துகள் அதிகம் விற்கப்பட வழிவகை செய்வார் என்றும் நம்பிக்கை உள்ளது.
சுகாதாரக் காப்பீட்டு திட்டங்களின் விரிவாக்கம்
ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) போன்ற சுகாதாரக் காப்பீட்டு (Health Insurance) திட்டங்களின் வரம்பும் நிதி உதவியும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.இந்த நலத்திட்டங்களில் அதிக குடும்பங்களை சேர்ப்பதன் மூலம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சுகாதார செலவுகளிலிருந்து அதிக எண்ணிக்கையான மக்களை நிதி ரீதியாக பாதுகாக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.
சிகிச்சைக்கான செயல்முறைகளை எளிதாக்குதல்
பெரிய மருத்துவமனைகளில் காத்திருப்பு காலம் பொதுவாக மிக அதிகமாக உள்ளது. மருந்து சீட்டுகள் போன்ற மிக அடிப்படையான சேவைகளுக்கு கூட 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் சில சமயம் ஏற்படுகின்றது. எனினும் சில நேரங்களில் இந்த தாமதம் நோயாளிக்கு ஆபத்தாக முடியலாம். அரசாங்கம் சிகிச்சைக்கான செயல்முறைகளை நெறிப்படுத்தி நோயாளிகள் உடனடி உதவியை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து அதற்கு தேவையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
மேலும் படிக்க | பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு பரிசு: மீண்டும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா?
சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தின் உதவி
சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தின் உதவி பெற்று, சேவை வழங்கல் மற்றும் அணுகலை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று தொழில்துறை வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். டெலிமெடிசின், சுகாதார பதிவுகள், ரிமோட் கண்காணிப்பு ஆகிய வசதிகள் இதில் அடங்கும்.
அரசு மருத்துவமனைகளின் மீது கவனம்
நமது நாட்டில் சுமார் 140 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இந்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது தரமான அரசு மருத்துவமனைகளின் (Government Hospitals) எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இதனால் சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரம் நீண்டு கொண்டே செல்கிறது. அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் இன்னும் அதிக அரசு மருத்துவமனைகளை கட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற கூற்று உள்ளது. நாட்டு மக்கள் சுகாதாரமாக, ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு முன்னேறும். நாட்டு மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருக்கும் துறைகளில் சுகாதார துறையும் ஒன்றாகும். இந்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மிக அத்தியாவசியமான இந்த துறையில் பல பெரிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ