மத்திய அமைச்சரவை இந்த ஆண்டில் அகவிலைப்படியை திருத்தம் செய்யப்போகிறது, மத்திய பிரதேச அரசு கிட்டத்தட்ட 7.5 லட்சத்தும் அதிகமான ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. அரசின் இந்த அகவிலைப்படி உயர்வானது இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடைமுறைக்கு வருமென்றும், செப்டம்பர் மாதத்தில் ஊழியர்களுக்கு இந்த உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து அதிகரித்து வரும் பணவீக்க விகிதங்கள் மற்றும் அத்திவாசிய பொருட்களின் விலையுயர்வு ஆகியவற்றை கருத்திற்கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படியை அமைச்சரவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதத்திற்கு பிறகு இரண்டாவது தடவையாக இப்போது டிஏ உயர்வு திருத்தம் செய்யப்பட இருக்கிறது, வெளியான சில தகவல்களின்படி 3 முதல் 4 சதவீதம் வரை டிஏ உயர்த்தப்படலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ல் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி, அனைத்து ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்துவதாக அறிவித்து, அதன்படி அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு சதவீத டிஏ உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு ஊழியர்கள் அனைவரும் 31 சதவீத டிஏ உயர்வை பெற்றனர். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊழியர்களுக்கு மேலும் 3 சதவீத டிஏ உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததுலிருந்து அரசு ஊழியர்கள் இப்போது 34 சதவீத உயர்வை பெற்று வருகின்றனர். பொதுவாக மத்திய அரசு ஜனவரி மற்றும் ஜூலை மாதம் என ஒரு ஆண்டுக்கு இரண்டு தடவை அகவிலைப்படியை உயர்த்துகிறது, ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த டிசம்பர் 2019ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை.
மேலும் படிக்க | 7th Pay Commission: அடுத்த வாரத்தில் வெளியாக இருக்கும் முக்கிய தகவல்!
தற்போது 34 சதவீதம் அகவிலைப்படி உயர்வின் மூலம் மாதத்திற்கு ரூ.20,000 அடிப்படை சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் ரூ.6,800 பெறுகிறார்கள். அதேசமயம் மத்திய அரசு மேலும் 4 சதவீத டிஏ உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் ஊழியயர்களுக்கு மாதம்தோறும் ரூ.800 உயர்த்தப்படும், 38 சதவீத டிஏ உயர்வில் ஊழியர்களுக்கு ரூ.7,600 கிடைக்கும். 38 சதவீதம் டிஏ உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்கள் ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ஆண்டுக்கு ரூ.91,200 பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | EPFO உறுப்பினர்கள் எச்சரிக்கை! PF தொடர்பான இந்த வேலையை விரைவில் செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ