நொய்டா: எஸ்ஸெல் குழுமத்தின் கடன்கள் விரைவில் தீர்ந்துவிடும் என குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். ஜீ பிசினஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக சிறப்பு பேட்டியில், விரிவாக பேசிய டாக்டர் சுபாஷ் சந்திரா, சொத்துக்களை விற்பதன் மூலம் கடனைச் செலுத்துவதே நோக்கமாகும் என்றும், இதுவரை நிறுவனம் 40,000 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தியுள்ளதாக குறிபிட்டார்.
ஜீ பிசினஸ் மேனேஜிங் எடிட்டர் அனில் சிங்வியுடன் டாக்டர் சுபாஷ் சந்திரா பிரத்யேக நேர்காணல்
ஜீ பிசினஸ் நிர்வாக ஆசிரியர் அனில் சிங்வி உடனான பிரத்யேக உரையாடலில் உரையாடிய டாக்டர் சுபாஷ் சந்திரா, எஸ்ஸெல் குழுமம் விரைவில் கடனில் இருந்து விடுபடும் என்பதை உறுதிபட தெரிவித்தார். சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கடனை அடைத்து வருவதாகக் டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.
நாற்பதாயிரம் கோடி ரூபாய் அசல் திருப்பி செலுத்தப்பட்டது
அந்த முயற்சியில் இதுவரை 40,000 கோடி ரூபாயை கடன் வழங்குபவர்களுக்கு திருப்பிச் செலுத்தியுள்ளதாகக் கூறினார்.
வட்டி மட்டும் ஐம்பதாயிரம் கோடி ரூபாய்
"நாங்கள் இதுவரை வட்டியாக மட்டுமே 50,000 கோடி ரூபாயை செலுத்தியுள்ளோம்" என்று டாக்டர் சந்திரா மேலும் கூறினார். தங்களது மிகவும் மதிப்புமிக்க சில சொத்துக்களை விற்று, எஸ்ஸெல் குழுமம், வாங்கிய கடனை அடைத்துள்ளதாகவும், கடனை அடைக்க தனது வீட்டையும் அடமானம் வைத்திருப்பதாகவும் டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.
மேலும் படிக்க | Axiom-2: விண்வெளிப் பயணத்தை வெற்றி! பூமிக்கு திரும்பிய ஆக்ஸியம்-2 குழுவினர்
கடனை திருப்பி செலுத்தும் உறுதி
அனைவரின் கடனையும் பணிவுடன் திருப்பிச் செலுத்துவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக டாக்டர் சந்திரா கூறினார். மேலும், டிஷ் டிவி இன்று கடனில் இருந்து விடுபடுவதாகவும், ஜீ எண்டர்பிரைசஸ்-சோனி இணைப்பு செயல்முறை விரைவில் முடிவடையும் என்றும் அவர் அனில் சிங்வியுடனான உரையாடலில் தெரிவித்தார்.
ஸ்டார்ட்அப்களுக்கு வழிகாட்டும் டாக்டர் சுபாஷ் சந்திரா
தற்போது ஸ்டார்ட்அப்களுக்கு வழிகாட்டும் டாக்டர் சுபாஷ் சந்திரா, "ஒரு வலிமையான நபர் பிரச்சனையில் இருந்து தப்பி ஓடமாட்டார், ஆனால் அதை எதிர்த்துப் போராடுவார்" என்று தெரிவித்தார். மோசமான காலங்கள் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாக வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகள் குறித்து டாக்டர் சுபாஷ் சந்திரா மனம் திறந்து பேசினார்.
கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறை எப்போது தொடங்கியது?
2019 ஜனவரியில் இருந்தே, தங்களது குழுமம், கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கியதாக, 97 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள எஸ்சல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார். "எங்கள் அனைத்து கடன்களையும் மார்ச் 31, 2023க்குள் திருப்பிச் செலுத்துவதே எங்கள் நோக்கமாக இருந்தது என டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.
மேலும் படிக்க | உலகத்திலேயே பெரிய பணக்காரர் பட்டத்தை எலோன் மஸ்கிடம் தொலைத்த பெர்னார்ட் அர்னால்ட்
இருப்பினும், அதைச் செயல்படுத்த முடியவில்லை. சில காரணங்களால் சொத்துக்களை விற்க முடியவில்லை" என்று டாக்டர் சந்திரா கூறினார். இருப்பினும், சில சொத்துக்கள் விற்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதன் பிறகு கடன் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கடன் வழங்குபவர்கள் பற்றி டாக்டர் சுபாஷ் சந்திரா
கடனைச் சுற்றி சர்ச்சைகளை உருவாக்கும் சில கடன் வழங்குநர்களைப் பற்றி கேட்டதற்கு பதிலஈத்த டாக்டர் சுபாஷ் சந்திரா, கடன் வழங்குநர்கள் எஸ்சல் குழுமத்திற்கு நிறைய ஆதரவளித்துள்ளனர் என்று பதிலளித்தார்.
"எஸ்சல் குழுமம் மதிப்புமிக்க சொத்துக்களை விற்று கடனை திருப்பிச் செலுத்தியது கடன் வழங்குபவர்களுக்கு தெரியும்." 1967 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை எஸ்ஸெல் குழுமம் ஒருபோதும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்ததில்லை என டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.
மேலும் படிக்க | மோடி தலைமையிலான 9 ஆண்டு பாஜக ஆட்சிக்குக் மோர்கன் ஸ்டான்லியின் ’ரிப்போர்ட் கார்ட்’
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ