EPF பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ

EPFO e-Statement Passbook download:உங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியுமா? இபிஎஃப் வட்டி பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பது உங்களுக்குத் தெரியுமா? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 23, 2022, 07:16 PM IST
  • வருங்கால வைப்பு நிதி இருப்பை தவறாமல் சரிபார்க்கிறீர்களா?
  • உங்கள் இபிஎஃப் கணக்கை நீங்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
  • இபிஎஃப் பாஸ்புக்கைப் பெற, இபிஎஃப்ஓ ​​இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.
EPF பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ title=

இபிஎஃப்ஓ இ-ஸ்டேட்மெண்ட் பாஸ்புக் பதிவிறக்கம் செய்வது எப்படி: உங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியுமா? இபிஎஃப் வட்டி பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பது உங்களுக்குத் தெரியுமா? வருங்கால வைப்பு நிதி இருப்பை தவறாமல் சரிபார்க்கிறீர்களா? இல்லையெனில், உங்கள் இபிஎஃப் கணக்கை நீங்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இபிஎஃப் பாஸ்புக் (இபிஎஃப் இ-ஸ்டேட்மென்ட்) பிரிவு 80C இன் கீழ் மொத்த வருமானத்தில் இருந்து எவ்வளவு விலக்கு பெறலாம் என்பதை அறிய உதவுகிறது. உங்கள் பங்களிப்பின் மீது இந்தக் கிளெயிமை நீங்கள் செய்யலாம்.

பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாஸ்புக்கின் பலன் கிடைக்கும்

இபிஎஃப் பாஸ்புக் (இபிஎஃப் இ-ஸ்டேட்மென்ட்) நீங்களும் உங்கள் நிறுவனமும் செய்த பங்களிப்பின் காரணமாக எவ்வளவு மொத்தத் தொகை  கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இது இபிஎஃப் கணக்கை முந்தைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்ற உதவுகிறது. இபிஎஃப் பாஸ்புக்கில், இபிஎஃப் கணக்கு எண், ஓய்வூதியத் திட்டத்தின் விவரங்கள், நிறுவனத்தின் பெயர் மற்றும் ஐடி, இபிஎஃப்ஓ ​​அலுவலக விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இபிஎஃப் பாஸ்புக்கைப் பெற, இபிஎஃப்ஓ ​​இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.

EPFO: How to Download EPFO Statement, Passbook? Step by Step process here

மேலும் படிக்க | இந்த தகவலை யாருக்கும் அனுப்ப வேண்டாம்! ஊழியர்களுக்கு EPFO எச்சரிக்கை! 

பதிவு செய்வது எப்படி?

1. https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ க்குச் செல்லவும்

2. Activate UAN (Universal Account Number) என்பதைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். UAN, ஆதார், PAN மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும். வேறு சில தகவல்களை உள்ளிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை சிவப்பு நிற நட்சத்திரத்துடன் குறிக்கப்பட்டிருக்கும்.

4. 'Get Authorization PIN' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். இதில், நீங்கள் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்கும்படி கேட்கப்படுவீர்கள். உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் OTP அனுப்பப்படும்.

5. ஓடிபியை உள்ளிட்டு, 'ஓடிபியைச் சரிபார்த்து யுஏஎன் ஆக்டிவேட் செய்' என்பதைக் கிளிக் செய்யவும். UAN ஐச் செயல்படுத்தும்போது, ​​கடவுச்சொல்லுடன் SMS பெறுவீர்கள். உங்கள் கணக்கில் உள்நுழைய இந்தக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். உள்நுழைந்த பிறகு உங்கள் கடவுச்சொல்லை மாற்றலாம்.

6. இபிஎஃப் அறிக்கையைப் பதிவிறக்கும் முன், பதிவுசெய்த 6 மணிநேரத்திற்குப் பிறகுதான் உங்கள் பாஸ்புக்கைப் பார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

EPFO: How to Download EPFO Statement, Passbook? Step by Step process here

இபிஎஃப்ஓ அறிக்கையைப் பதிவிறக்க, இந்த வழிமுறையை பின்பற்றவும்:

ஸ்டெப் 1: https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp என்ற இணையதளத்திற்கு செல்லவும். 

ஸ்டெப் 2: UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். 'லாக் இன்' என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: லாக் இன் செய்த பிறகு, உங்கள் பாஸ்புக்கைப் பார்க்க உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்.

பாஸ்புக் PDF வடிவத்தில் இருக்கும். அதை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

விலக்கு அளிக்கப்பட்ட பிஎஃப் அறக்கட்டளைகளின் பாஸ்புக்குகளைப் பார்க்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். அத்தகைய நிறுவனங்கள் பிஎஃப் அறக்கட்டளையை தாங்களே நிர்வகிக்கின்றன.

உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், கடவுச்சொல்லை மீட்டமைக்கலாம். இதற்கு, ஒருவர் இபிஎஃப்ஓ ​​உறுப்பினர் இ-சேவை இணையதளத்திற்கு (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) சென்று இதற்கான செயல்முறையை செய்யவும். 

மேலும் படிக்க | EPFO ஈ நாமினேஷன் மூலம் கிடைக்கும் பல வித பயன்கள்: முழு விவரம் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News