FD Lock-In Period: இந்திய வங்கிகள் சங்கம் (IBA) வங்கிகளின் நிலையான வைப்புத்தொகை தொடர்பாக நிதி அமைச்சகத்திற்கு ஒரு திட்ட வரைவை அனுப்பியுள்ளது. 2022 பட்ஜெட்டில் அதன் விதிகள் மாற்றப்பட வேண்டும் என்று IBA கூறியுள்ளது.
வங்கிகளின் FD லாக்-இன் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அதில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கி எஃப்டிகளின் (Fixed Deposit) லாக்-இன் கால அளவை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைத்து, அதன் பிறகு அதை வரி எல்லையின் கீழ் கொண்டுவந்தால் மட்டுமே, மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது எஃப்டிகள் கவர்ச்சிகரமானதாக மாறும் என்றும், அப்போதுதான் முதலீட்டாளர்கள் இதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள் என்றும் ஐபிஏ தெரிவித்துள்ளது.
வரி சேமிப்பு FD-களுக்கு மூன்று ஆண்டுகள் லாக்-இன் காலம் தேவை
வரிச் சேமிப்பு (Tax Saving) வங்கி FD-க்களும் மூன்று வருடங்கள் லாக்-இன் கால அளவைக் கொண்டிருக்க வேண்டும் என்று IBA கோருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் வங்கிகளில் இருப்பு வைக்கும் தொகையின் அளவு கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் இதை மீண்டும் அதிகரிக்க முடியும்.
ALSO READ | SBI FD Interest Rates: SBI வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த பம்பர் பரிசு இதோ
வங்கி FD வட்டி தொடர்ந்து குறைந்து வருகிறது
இப்போது சில காலமாக, வங்கிகள் FD-களுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வருகின்றன. பெரிய வங்கிகள் இப்போது 5-6 சதவீத வட்டியை மட்டுமே வழங்குகின்றன. எஃப்.டி-களுக்கு வங்கிகள் அளிக்கும் விகிதங்கள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் வங்கியில் இருந்து டெபாசிட்களை திரும்பப் பெற்று பங்குச் சந்தை அல்லது மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வங்கி FD இல் முதலீடு செய்தால் மட்டுமே வரி விலக்கு பலன் கிடைக்கும்
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வங்கி FD களில் முதலீடு செய்தால் மட்டுமே, வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு கிடைக்கும். மேலும் இதில் அனைத்து FD-களும் வரியின் பலனைப் பெறாது. இந்த காரணங்களால் இப்போது முதலீட்டாளர்கள் வங்கிகளின் எஃப்டிகளில் குறைந்த ஆர்வத்தைக் காட்டுகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்டுகளின் ELSS இல் அதிக முதலீடு ஏன்?
மியூச்சுவல் ஃபண்டுகளின் (Mututal Fund) ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீமின் (ELSS) லாக்-இன் காலம் 3 ஆண்டுகள் ஆகும். 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுத்தால், ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரி விலக்கின் பலனைப் பெறலாம். ஒரு வருடத்தில் ELSS இன் முதலீட்டில் ஒரு லட்சம் அளவிலான பலன் பெறுபவர்கள் அதற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. இந்த காரணத்தால் இப்போது முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளின் ELSS-இல் அதிக முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ALSO READ | Fixed Deposit-க்கு மிக அதிக வட்டி அளிக்கும் டாப் வங்கிகள் இவைதான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR