GOOD NEWS.. செட்டாப் பாக்ஸ் ரீசார்ஜ் செய்யாமல் 7 நாட்கள் டிவி பார்க்க முடியும் எப்படி?

டாடா ஸ்கை பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. லாக்-டவுன் காரணமாக ரீசார்ஜ் செய்ய முடியாத பயனர்களுக்கு 7 நாள் நிலுவைக் கடனை நிறுவனம் வழங்குகிறது. இந்த 7 நாள் கிரெடிட்டுக்கு 080-61999922 என்ற எண்ணுக்கு அழைப்பை செய்ய வேண்டும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 28, 2020, 03:47 PM IST
GOOD NEWS.. செட்டாப் பாக்ஸ் ரீசார்ஜ் செய்யாமல் 7 நாட்கள் டிவி பார்க்க முடியும் எப்படி? title=

புது தில்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை காரணமாக 21 நாட்கள் நாடு முழுவதும் லாக்-டவுன் (Lockdown) செய்யப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில், பொதுமக்களுக்கு தேவையான சேவைகளில் எந்தவித சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசாங்கம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதே நேரத்தில், தனியார் நிறுவனங்களும் தங்கள் சேவைகளில் தேவையான மாற்றங்களைச் செய்து மக்களுக்கு தடை ஏதுவும் இன்றி சேவை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மக்களும்‌ சில நன்மைகளும் பெறுவார்கள். 

இதற்கிடையில், நாட்டின் சிறந்த டி.டி.எச் (DTH) நிறுவனமான டாடா ஸ்கை பயனர்களுக்கு 7 நாள் நிலுவை கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளது. சலுகையைத் தேர்ந்தெடுத்த பிறகு, கடன் தொகை பயனரின் டாடா ஸ்கை (Tata Sky) கணக்கிலிருந்து 8 வது நாளில் கழிக்கப்படும். இது போன்ற சலுகைகளைப் பயனர்கள் உடனடியாக ரீசார்ஜ் செய்ய முடியாத சூழலில் பயன்படுத்திக் கொள்ள நிறுவனம் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

குறிப்பாக டி.டி.எச் செயலிழந்த பின்பு லாக் டவுன் காரணமாக பயனர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாவிட்டால், அவர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சந்தாதாரர்களுக்கு 7 நாள் கிரெடிட் வழங்கப்படும். இந்த கடன் சலுகை காலத்தை பெற 080-61999922 என்ற எண்ணில் அழைப்பை வழங்க வேண்டும். இந்த எண்ணில் அழைப்பை வழங்கிய பிறகு, 7 நாட்கள் நிலுவை பயனரின் கணக்கில் வரவு வைக்கப்படும். பின்னர் Tata Sky நிறுவனம் இந்த நிலுவைத் தொகையை 8 வது நாளில் தானாகவே கழித்துக்கொள்ளும்.

பிட்னஸ் சேவை சேனலை இலவசமாக்கிய டாடா ஸ்கை:
நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்-டவுன் செய்யப்பட்டு உள்ளதை அடுத்து டாடா ஸ்கை (Tata Sky) அதன் சந்தாதாரர்களுக்கு பிட்னஸ் சேவை சேனலை 21 நாட்களுக்கு இலவசமா ஒளிபரப்பு செய்கிறது. இந்த சேவையின் மூலம், டாடா ஸ்கை வெவ்வேறு நிபுணர்களின் உடற்பயிற்சி வீடியோக்களை ஒளிபரப்புகிறது. வழக்கமாக அந்த சேவைக்கு தினமும் ரூ .2 வசூலிக்கப்படுகிறது. ஆனால் லாக்-டவுன் காலம் முடியும் வரை இது இலவசமாக கிடைக்கும்.

Trending News