இந்தியாவில் ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொள்ளலாம்? விதிகள் கூறுவது என்ன?

Credit Card: மக்கள் பல வித தேவைகள் மற்றும் பயன்பாடுகளுக்காக பல கிரெடிட் கார்டுகளைப் பெறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு நபர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2023, 11:08 AM IST
  • பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது அதிக கடன் வரம்புகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது.
  • இதன் காரணமாக நீங்கள் அவற்றை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தக்கூடும்.
  • மேலும் இவற்றை பயன்படுத்தி உங்களுக்கு உண்மையில் தேவையில்லாத பொருட்களை வாங்கலாம்.
இந்தியாவில் ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொள்ளலாம்? விதிகள் கூறுவது என்ன? title=

கிரெடிட் கார்டு, முக்கிய தகவல்: கிரெடிட் கார்டுகளின் பயன்பாடும் முக்கியத்துவமும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஒரு கிரெடிட் கார்ட் வைத்திருப்பது பெருமையாக கருதப்பட்ட காலம் போய், தற்போது ஒருவர் பல கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் அளவிற்கு இவற்றின் தேவை அதிகரித்துவிட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு கிரெடிட் கார்டு சந்தையின் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. மக்கள் பல வித தேவைகள் மற்றும் பயன்பாடுகளுக்காக பல கிரெடிட் கார்டுகளைப் பெறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு நபர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதை பற்றியும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதன் நன்மைகள்

அதிக செலவு செய்யும் திறன்: 

கிரெடிட் கார்டுகளின் (Credit Cards) எண்ணிக்கை அதிகரித்தால், அதன் காரணமாக, உங்கள் கடன் வரம்பும் அதிகரிக்கிறது. எனவே உங்களுக்கு சில கூடுதல் செலவின சக்தி கிடைக்கிறது. இது வாங்கும் திறனை அதிகரிப்பதோடு அவசர தேவைகளின் போது மிக உதவியாக இருக்கும். 

இருப்பு பரிமாற்ற வசதி (Balance Transfer): 

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகள் இருந்தால், பல கார்டுகளில் இருந்து ஒரு கார்டுக்கு இருப்புத்தொகையை மாற்றலாம். பின்னர் உங்கள் வசதிக்கேற்ப அந்த கார்டில் உள்ள தொகையை திருப்பிச் செலுத்தலாம். இது இருப்பு பரிமாற்ற வசதி, அதாவது Balance Transfer என்று அழைக்கப்படுகிறது.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க பயன்படும்: 

ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது, அவை ஒவ்வொன்றிலும் குறைந்த கடன் பயன்பாட்டு விகிதத்தை பராமரிக்க ஒரு யதார்த்தமான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் குறைந்த கடன் விகிதம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.

பல கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள்

கடன் தொல்லை: 

பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது அதிக கடன் வரம்புகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது. இதன் காரணமாக நீங்கள் அவற்றை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தக்கூடும். மேலும் இவற்றை பயன்படுத்தி உங்களுக்கு உண்மையில் தேவையில்லாத பொருட்களை வாங்கலாம். இதனால் நீங்கள் கடன் பொறியில் சிக்கி, சரியான நிதி சமநிலையை அடைய போராடலாம்.

மேலும் படிக்க | வொர்க் ஃப்ரம் ஹோம், ரிமோட் வொர்க்கெல்லாம் இனி கிடையாது! எல்லாம் ஹைபிரிட் மாடல் தான்

கிரெடிட் ஸ்கோர் குறையலாம்: 

பல கார்டுகளை வைத்திருத்தல், பல கட்டணப் பொறுப்புகளைக் குறிக்கிறது. சில சமயங்களில் பல கார்டுகளை வைத்திருப்பதால், குழப்பத்தில் உங்கள் கடன் தொகையைச் செலுத்துவதை நீங்கள் தவறவிடலாம். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையலாம். எனவே, நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க திட்டமிட்டால், கூடுதல் நிதிப் பொறுப்பை ஏற்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

கட்டணங்கள்: 

உங்கள் கிரெடிட் கார்டில் விதிக்கப்படும் பல்வேறு கட்டணங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். கிரெடிட் கார்டு பெறுதல் கட்டணம், வருடாந்திர கட்டணம், தாமதமாக செலுத்தும் கட்டணம், ரொக்க முன்பணக் கட்டணம், வெகுமதி மீட்புக் கட்டணம் போன்றவை இதில் உள்ளன. எனவே, அதிக கார்டுகளுக்கு கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

எத்தனை கிரெடிட் கார்டுகளை ஒருவர் வைத்துக்கொள்ளலாம்? 

கிரெடிட் கார்டுகளுக்கு இந்தியாவில் அத்தகைய வரம்பு எதுவும் இல்லை. எந்தவொரு நபரும் தனது தேவைக்கு ஏற்ப எத்தனை கிரெடிட் கார்டுகளை வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இருப்பினும், மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தால், அதன் நன்மைகள் மற்றும் தீமைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை பற்றி நன்கு தெரிந்துகொண்டு, தங்கள் தேவைகளுக்கு ஏற்ப இது பற்றிய முடிவை எடுப்பது நல்லது. 

மேலும் படிக்க | ரூ 50 லட்சம் முதலீட்டில் ரூ 7 லட்ச மாத வருமானம் கொடுக்கும் சுலபமான தொழில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News