உழவர் உற்பத்தியாளர் அமைப்பு: விவசாயிகளுக்கு மத்திய அரசால் பல வசதிகள் வழங்கப்படுகின்றன. பிரதம மந்திரி கிசான் யோஜனா தவிர, விவசாயிகளுக்கு 15 லட்சம் ரூபாய் உதவித்தொகையை அரசு வழங்குகிறது. 15 லட்சம் ரூபாய் பெற விவசாயி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். அதற்கு முன்னதாக, இந்தத் திட்டம் ஏன் தொடங்கப்பட்டது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.இந்தியா ஒரு விவசாய நாடு, ஆனால் இன்றும் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் சுலபமாக கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்துத் தருவதற்காக மத்திய அரசு பிரதமர் கிசான் எஃப்பிஓ திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
15 லட்சம் ரூபாய் நிதியுதவி
FPO அதாவது உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு விவசாயம் தொடர்பான தொழில் தொடங்க ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.PM Kisan FPO திட்டத்தின் பலன்களைப் பெற, விவசாயிகள் ஒரு அமைப்பு அல்லது நிறுவனத்தை (FPO) உருவாக்க வேண்டும், அதில் குறைந்தது 11 விவசாயிகள் இருக்க வேண்டும்.
இந்த அரசின் திட்டத்தின் மூலம், விவசாயம் தொடர்பான உபகரணங்கள் அல்லது உரங்கள், மருந்துகள் மற்றும் விதைகள் போன்றவற்றை வாங்குவதற்கு விவசாயிகள் நிதியுதவி பெறலாம்.2023-24 ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் FPOக்களை உருவாக்க அரசு இலக்கு வைத்துள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறை
இந்திய அரசின் தேசிய வேளாண் சந்தையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.enam.gov.in) இந்த அரசாங்கத் திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | PM கிசான் 15வது தவணை ரூ.2000 உங்களுக்கு கிடைக்குமா... சரிபார்ப்பது எப்படி!
FPO (Farmer Producer Organization) என்பது ஒரு வகையான உழவர் உற்பத்தியாளர் அமைப்பாகும், இது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விவசாயிகளின் நலன்களுக்காக செயல்படும் ஒரு அமைப்பாகும். PM Kisan FPO திட்டம் அத்தகைய நிறுவனங்களை ஊக்குவிக்கும். இத்திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவியை அரசு வழங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் செய்யும் விவசாயம் மற்றும் வியாபாரம் என இரண்டிலும் லாபம் கிடைக்கும்.
சமவெளிப் பகுதிகளில் மட்டுமே ஒரு FPO இயங்கினால், PM Kisan FPO திட்டம் 2023 இன் கீழ் குறைந்தது 300 விவசாயிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும். அதேபோல், மலைப் பகுதிகளில் ஒரு அமைப்பு வேலை செய்தால், குறைந்தபட்சம் 100 விவசாயிகள் FPOவில் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
PM Kisan FPO திட்டம் 2023 இன் கீழ் நன்மைகளைப் பெற என்ன தகுதி வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டவராகவும் இருக்க வேண்டும்
சமவெளியில் செயல்படும் FPO அமைப்பில் குறைந்தது 300 விவசாயிகள் இருக்க வேண்டும்
மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு FPO குறைந்தது 100 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்
ஒரு FPO க்கு அதன் சொந்த சாகுபடி நிலம் இருப்பது கட்டாயமாகும், மேலும் விவசாயி குழுவில் ஒரு பகுதியாக இருப்பதும் கட்டாயமாகும்.
மேலும் படிக்க | ரயில்வே ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: தீபாவளி போனஸை தொடர்ந்து அதிரடி டிஏ ஹைக்
PM Kisan FPO திட்டம் 2023 இன் கீழ் பலன்களைப் பெற தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை
முகவரி ஆதாரம்
நில ஆவணங்கள்
ரேஷன் கார்டு
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
வங்கி கணக்கு விவரங்கள்
கைபேசி எண்
இந்திய விவசாயிகள், விவசாயத்தைத் தவிர வேறு விதங்களிலும் பயனடைவார்கள். அவர்கள் இணைந்திருக்கும் எஃப்.பி.ஓ அமைப்புகள், அவர்களின் விளைபொருட்களுக்கு சந்தையை உருவாக்கிக் கொடுக்கும். விவசாய இடுபொருட்களான உரம், விதைகள், மருந்துகள் மற்றும் விவசாய உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களைப் பெறுவது சுலபமானதாக இருக்கும்.
PM Kisan FPO திட்டத்தில் பதிவு செய்ய வழிமுறைகள்
தேசிய வேளாண் சந்தையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் FPO விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் பதிவு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
திரையில் தோன்றும் பதிவு படிவத்தை படித்து தேவையான விவரங்கள் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும்
படிவத்தில் நிரப்ப வேண்டிய தகவல்கள்
பதிவு நிலை
முழு பெயர்
பாலினம்
முகவரி
பிறந்த தேதி
அஞ்சல் குறியீடு
மாவட்டம்
புகைப்பட ஐடி வகை
கைபேசி எண்
மின்னஞ்சல் முகவரி
நிறுவனத்தின் பெயர்
நிலை
தாசில்தார்
புகைப்பட அடையாள எண்
மொபைல் எண் (இரண்டாவது கைபேசி எண்)
உரிமம் எண்
நிறுவனத்தின் பதிவு
வங்கி பெயர்
கணக்கு வைத்திருப்பவரின் பெயர்
வங்கி கணக்கு எண்
IFSC குறியீடு
பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை, அடையாளச் சான்று மற்றும் பதிவு வகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து அந்த கோப்புகளை பதிவேற்ற வேண்டும்.
அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டதை உறுதி செய்துக் கொண்டு சமர்ப்பி என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலும் படிக்க | EPF கணக்கில் வட்டி: தீபாவளி பரிசாக வருகிறதா பம்பர் தொகை? அதிரடி அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ