Man Used AI To Apply For 1000 Jobs : முன்பெல்லாம், எது தெரியவில்லை என்றாலும், “கூகுளை கேட்கலாம்..” என்று அதில் தேடுவோம். ஆனால், இப்போதோ பலர், பெரிய பெரிய குழப்பங்களுக்கே விடையளிக்கும் AI chatbot-ஐ உருவாக்க ஆரம்பித்து விட்டோம். இந்த Artificial Intelligence எனப்படும் AI-யினால் பல்வேரு துறைகளும், நிறுவனங்களும் வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. இதை உபயோகிக்கும் தனி நபர்களும் இதனால் பயனடைகின்றனர். அப்படி, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவர் செய்துள்ள சம்பவம் பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
AI-ஐ பயன்படுத்தி 1000 வேலைக்கு விண்ணப்பம்..!
Reddit தளத்தில் ஒருவர், தான் 1000 வேலைகளுக்கு விண்ணப்பித்து தனக்கு வேலை கிடைத்ததாக கூறியிருக்கிறார். இதற்கான AI Bot-ஐ அவரே உருவாக்கியிருக்கிறார். அது, சுய விவரக்குரிப்பை (CV& Resume) உருவாக்கி சரி பார்ப்பது முதல், அவற்றை பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பு, விண்ணப்ப செயல்முறையை முடிக்கும் அனைத்து வேலைகளையும் பார்த்து விடுகிறது.
இது, வேலை விவரங்களை ஆராய்ந்து, அதற்கேற்றவாரு கவர் லெட்டரையும் தயார் செய்து அனுப்புமாம். இப்படி, 1000 வேலைகளுக்கு விண்ணப்பித்ததில், அந்த நபருக்கு ஒரு மாதத்தில் 50 நிறுவனங்கள் நேர்காணலுக்கு இவரை அழைத்துள்ளது.
இதில் இருக்கும் ப்ளஸ்:
ஒரே இரவில், தான் உறங்கி கொண்டிருக்கும் போது, AI தனக்காக இந்த வேலையை பார்த்ததாகவும் அந்த நபர், தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இது எப்படி வேலை கிடைக்க பயன்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
வேலை தேடுபவர்கள், தங்களது சுய விவரக்குறிப்பை சில விநாடிகளில் உருவாக்கி விடலாம்.
கவர் லெட்டர்களை சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
தங்கள் திறனுக்கு ஏற்பவாறு என்ன வேலை இருக்கிறது என்பதை, சில நிமிடங்களில் தெரிந்து கொண்டு அதற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.
தனது தனிப்பட்ட கருத்தையும் கருத்தையும் அந்த நபர் தெரிவித்திருக்கிறார். அதில், “AI தொழில்நுட்ப புரட்சியைக் பார்க்கும் போது, இது உலகில் ஏற்படும் ஆழமான தாக்கங்களைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை” என குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், இப்படியே அனைத்து விஷயங்களையும் பயன்படுத்தினால், அனைத்து விஷயங்களும் மனிதர்கள் இல்லாமல் இயங்க ஆரம்பித்து விடுமோ என்ற பயமும் இருப்பதாக அவர் கூறுகிறார். இனி வரும் காலங்களில், டெக்னாலஜி-மனிதர்கள் இடையே இருக்கும் பிரச்சனையை தாண்டி, சமூக நெறிமுறைகள் குறித்த பெரிய கேள்வியும் எழலாம் என குறிப்பிட்டிருக்கிறார். எனவே, AI மற்றும் மனிதர்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை சமநிலையுடன் கையாள வேண்டும் என்றும் அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.
AI-ஆல் ஏற்படும் முன்னேற்றங்கள்:
AI, ஒவ்வொரு முறையும் மனிதர்கள் தன்னிடம் கொடுக்கும் தரவுகளை சேமித்து அதன் மூலம் கற்றுக்கொள்கிறது.
வித்தியாசமான அல்லது கடினமான எந்த ஒரு பிரச்சனையையும் சமாளிக்கும்/சரி செய்து தரும் திறனை கொண்டுள்ளது AI.
மனிதர்கள் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கும் இது ஆலோசனைகளை வழங்குகிறது.
AI, அனைத்து மொழிகளையும் அறிந்து கொண்டு நமக்கு ஏற்ற மொழியில் பதிலளிக்கும்.
AI-ஐ, நிதித்துறை, ஹெல்த்கேர், சில்லறை விற்பனை உள்ளிட்ட பல துறைகளில் உபயோகிக்கின்றனர்.
AI, வார்த்தைகளை படிப்பதோடு மட்டுமன்றி, படங்களை வைத்தும் பல தகவல்களை கொடுக்கவல்லது.
மேலும் படிக்க | ஏஐ செய்யப்போகும் உலகமகா பிரச்சனைகள்..!
மேலும் படிக்க | உதவி கேட்ட மாணவரை ‘செத்துப்போ’ எனக்கூறிய AI Chatbot! மனிதர்களின் அழிவு ஆரம்பமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ