PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க சுலபமான செயல்முறை இதோ

EPF Withdrawal: இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தாங்கள் பணுபிரியும் நிறுவனத்தின் தலையீடின்றி தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், சில முக்கியமான விஷயங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 25, 2024, 02:53 PM IST
  • பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க சுலபமான வழி.
  • இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க தேவையான ஆவணங்கள்.
  • முதலாளி / நிறுவனத்தின் தலையீடின்றி பணத்தை எடுக்கும் செயல்முறை.
PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க சுலபமான செயல்முறை இதோ title=

EPF Withdrawal: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கு.ம். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இன் கீழ் செயல்படும் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுப்பது இப்போது மிகவும் எளிமையானதாகிவிட்டது. EPFO தொடர்ந்து இபிஎஃப் உறுப்பினர்களின் நன்மைக்காக பல வித வசதிகளை அதிகப்படுத்துகின்றது. அவற்றின் மூலம், கணக்கு தொடர்பான செயல்முறைகளும் மிக எளிதாகி வருகின்றன.

இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தாங்கள் பணுபிரியும் நிறுவனத்தின் அனுமதியின்றி தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், சில முக்கியமான விஷயங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க தேவையான ஆவணங்கள்:

யுனிவர்சல் கணக்கு எண் (UAN): இது உங்கள் EPF கணக்கின் தனிப்பட்ட அடையாள எண்ணாகும்.

அடையாளச் சான்று, முகவரி சான்று: ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகளை இவற்றுக்கு பயன்படுத்தலாம்.

வங்கிக் கணக்குத் தகவல்: உங்கள் இபிஎஃப் தொகையைப் (EPF Amount) பெற விரும்பும் வங்கிக் கணக்கின் விவரங்கள்.

கேன்சல்ட் செக்; கணக்கு இருக்கும் வங்கியின் IFSC குறியீடு மற்றும் கணக்கு எண்ணைக் கொண்ட ஒரு கேன்சல்ட் செக் தேவைப்படும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் 8வது ஊதியக்குழு: எப்போது வரும்?

முதலாளி / நிறுவனத்தின் தலையீடின்றி பணத்தை எடுக்கும் செயல்முறை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் இருந்து, முதலாளி / நிறுவனத்தின் தலையீடு இல்லாமல் இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) EPF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கு பின்வரும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

- UAN செயல்முறை: உங்கள் UAN ஆக்டிவ்வாக இருப்பதை, அதாவது அது செயல்படுத்தப்பட்டிருப்பதையும், உங்களின் அனைத்து KYC ஆவணங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

- இ-சேவா போர்ட்டலில் லாக்-இன்: EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று, உங்கள் UAN மற்றும் கடவுச்சொல் கொண்டு லாக் இன் செய்யவும்.
- க்ளெய்மை உருவாக்கவும்: இதற்கு முதலில் "Claim (Form-31, 19 & 10C)" -இல் கிளிக் செய்ய வேண்டும். அத பிறகு உங்கள் EPF கணக்கு விவரங்களை நிரப்ப வேண்டும். பணத்தை எடுப்பதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும்.
- ஆவணங்களை பதிவேற்றவும்: தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும்.
- க்ளெய்மை சப்மிட் செய்ய வேண்டும்: அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்த பிறகு, க்ளெய்மை சப்மிட் செய்ய வேண்டும்.
- ஸ்டேடசை டிராக் செய்யவும்: உங்கள் க்ளெய்ம் ஸ்டேடசை ஆன்லைனில் கண்காணிக்கலாம். பொதுவாக, க்ளைம் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கிற்குத் தொகை மாற்றப்படும்.

இந்த விஷயங்களில் கவனம் தேவை

மொபைல் எண் யுஏஎன் பதிவு:

இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண் அவரது UAN உடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனால் OTP மற்றும் பிற தகவல்களை எளிதாகப் பெறுவது சாத்தியமாகும். 

KYC புதுப்பிப்பு: ஆதார், பான் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற அனைத்து KYC ஆவணங்களும் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். 

சமீபத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி 50 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். சில நாட்களுக்கு முன்னர், மத்திய அரசின் 100 நாட்கள் நிறைவு விழாவை ஒட்டி நடந்த விழாவில், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர், அகவிலைப்படி முதல் சிறுசேமிப்பு திட்டங்கள் வரை: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News