Indian Railways Latest Update: நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் அதனால் ஏற்படும் எதிர்பாராத தாமதம் என்பது பல நேரங்களில் மக்கள் தங்கள் ரயிலை கடைசி நேரத்தில் பிடிக்கவும் அல்லது ரயிலை தவறவிடவும் செய்யும்.
இப்போது வரை, பயணிகள் தாங்கள் ஏற வேண்டிய ரயில் நிலையத்தில் ரயிலை தவறிவிட்டுவிட்டால், பின் ஓரிரு ரயில் நிலையங்களுக்கு பிறகு ஏறினாலும், அவர்களின் பயணம் டிக்கெட் பரிசோதகரால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் தற்போது ரயிலில் புறப்பட்டு, பயணி அந்த ரயிலில் ஏறாமல்விட்டுவிட்டால் அடுத்த 10 நிமிடங்களில் அவரது டிக்கெட் ரத்து செய்யப்பட்டு மற்றொரு பயணிக்கு இருக்கை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
10 நிமிடங்கள் வரை காத்திருப்பார்!
தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின்படி, பயணிகள் அவர் பயணத்தைத் தொடங்க வேண்டிய நிலையத்தில் இருந்து ரயிலில் ஏற வேண்டும். டிக்கெட் பரிசோதகர், சோதனையின் போது ஒரு பயணி தனது இருக்கையில் காணப்படவில்லை என்றால், அவர் அவருக்காக 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு, அவர் ரயிலில் பயணம் செய்யாததை அவர் பதிவேட்டில் பதிவு செய்வார். இதனுடன், அந்த ரத்து செய்யப்பட்ட இருக்கை ரயிலில் பயணிக்கும் மற்றொரு இருக்கை ஒதுக்கப்படாத பயணிக்கு ஒதுக்கப்படும்.
மேலும் படிக்க | Indian Railways: ரயில் டிக்கெட் முக்கிய அப்டேட்.. புதிய வசதி.. குஷியில் பயணிகள்!!
இப்போது விவரங்கள் ஆன்லைனில் உள்ளிடப்பட்டுள்ளன
இப்போது வரை டிக்கெட் பரிசோதகர், அவர் வைத்திருக்கும் காகித பட்டியலில் தான் ரயில் பயணிகளின் வருகையைக் குறித்து வருகிறார்கள். இந்த நிலையில், பயணி வருவதற்கு அடுத்த ஸ்டேஷன் வரை அவர் காத்திருப்பார். ஆனால் தற்போது அவருக்கு டேப்லெட் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அவர் பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்த்து, அவர்கள் வந்தார்களா, இல்லையா என்ற விவரங்களை நிரப்புகிறார். இதனுடன் இந்திய ரயில்வேயின் பதிவுகளிலும் அவரது விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாமதம் டிக்கெட்டை ரத்து செய்ய வழிவகுக்கும்
அறிக்கையின்படி, இப்போது டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், பயணிகள் தங்கள் தொடங்க வேண்டிய ரயில் நிலையத்தில் இருந்தே ரயிலில் ஏறி தங்கள் இருக்கைகளை அடைய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அவர்களது டிக்கெட்டுகளை ரத்து செய்து மற்ற பயணிகளுக்கு வழங்கலாம். ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால் பல முறை டிக்கெட் பரிசோதகர், பயணிகளின் இருக்கையை அடைய தாமதமாகலாம். அத்தகைய சூழ்நிலையில், பயணிகளுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும், ஆனால் அவ்வாறு செய்வது ஆபத்தில் இருந்து விடுபடாது. எனவே, இருக்கை உள்ள இடத்தில், சரியான நேரத்தில் சென்றடைவது நல்லது. இந்த புதிய விதியை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ஏசி பெட்டியில் பயணிப்பவரா? ரயில்வேயின் இந்த ரூல்ஸ் தெரியுமா? பாத்து நடந்துக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ