கொரோனா ஊரடங்கால் இந்தியாவின் பயணிகள் கார்களின் விற்பனை ஜூன் மாதத்தில் 57.98% குறைந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது!!
இந்தியாவில் பயணிகள் கார்களின் விற்பனை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது சுமார் 57.98 சதவீதம் குறைந்துள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மோசமான கோரிக்கையுடன் உள்ளது. "ஜூன் 2019 உடன் ஒப்பிடும் போது, ஜூன் 2020 ஆம் ஆண்டில் பயணிகள் கார்களின் விற்பனையில் 57.98% குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று சியாம் ஒரு மெய்நிகர் மாநாட்டில் தெரிவித்துள்ளது.
2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2020 ஜூன் மாதத்தில் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 31.16 சதவீதம் குறைந்துள்ளது என்று தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. வேன்களின் விற்பனை 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 62.06 சதவீதம் குறைந்துள்ளது.
READ | See Pic: கண்ணில் படும் பெண்களை எல்லாம் நயன்தாராவாக மாற்றும் இளைஞன்!
சியாமின் சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் 2019 உடன் ஒப்பிடும் போது, பயணிகள் வாகனங்களின் விற்பனை 2020 ஜூன் மாதத்தில் 49.59 குறைந்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் முறையே 38.56% மற்றும் 80.15% விற்பனையில் சரிவைக் கண்டன.
பயணிகள் வாகனங்கள், முச்சக்கர வண்டி மற்றும் இரு சக்கர வாகனங்களின் மொத்த ஏற்றுமதி 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் முறையே 56.31 சதவீதம், 34.98 சதவீதம் மற்றும் 34.25 சதவீதம் குறைந்துள்ளது என்று சியாம் தெரிவித்துள்ளது.