பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை

Stock market Hike Record Break: இதுவரை இல்லாத அளவு இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சாதனை மட்டத்தில் தொடங்கின. சென்செக்ஸ் முதன்முறையாக 67,659.91 மற்றும் நிஃப்டி குறியீட்டு எண் 20,156.45 என்ற புள்ளிகளிலும் தொடங்கின

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 15, 2023, 11:02 AM IST
  • உச்சத்தில் பங்குச்சந்தை
  • இதுவரை இல்லாத புதிய சாதனை
  • சாதனை மட்டத்தில் தொடங்கிய பங்குச்சந்தை
பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை  title=

மும்பை: இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே, இந்திய பங்குச்சந்தை சாதனை அளவை எட்டியது. இதுவரை இல்லாத அளவு இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சாதனை மட்டத்தில் தொடங்கின. சென்செக்ஸ் முதன்முறையாக 67,659.91 மற்றும் நிஃப்டி குறியீட்டு எண் 20,156.45 என்ற புள்ளிகளிலும் தொடங்கின. வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் பங்குச் சந்தை சாதனை அளவில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சந்தை தொடர்ந்து 11வது நாளாக ஏற்றத்தைக் கண்டுள்ளது. இன்றைய வணிகத்தின் தொடக்கத்தில், ஐடி துறையில் அதிரடியான உயர்வு இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.  

சென்செக்ஸ்-நிஃப்டி உயர்வு 
சென்செக்ஸ் தற்போது 197.43 புள்ளிகள் அல்லது 0.29 சதவீதம் அதிகரித்து 67,716.43 என்ற அளவில் வர்த்தகமாகிறது. அதே நேரத்தில், நிஃப்டி குறியீடு 48.40 புள்ளிகள் அல்லது 0.24 சதவீதம் அதிகரித்து 20,151.50 என்ற அளவில் கணிசமான லாபத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

உலக சந்தையில் ஏற்றம் உள்ளது

இன்று உலக சந்தையில் இருந்து நல்ல சமிக்ஞைகள் உள்ளன. ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகளும் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர, டவ் ஃபியூச்சர்களும் முன்னேறத்தை கண்டுள்ளன. டவ் ஜோன்ஸ் கிட்டத்தட்ட 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

 

விலை உயரும் பங்குகள்

சென்செக்ஸில் HCL டெக் அதிக லாபத்துடன் வர்த்தகம் செய்கிறது. HCL Tech பங்குகள் 1.36 சதவீதம் உயர்ந்து 1300 என்ற அளவில் வர்த்தகமாகிறது. டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கணிசமான லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மேலும் படிக்க | Post Office Scheme: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் அலுவலக முதலீட்டு திட்டம்!

வீழ்ச்சியடையும் பங்குகளின் பட்டியல்

கணிசமான லாபத்தை கொடுக்கும் பங்குகளுக்கு மத்தியில், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை குறைந்து காணப்படுகிறது. ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் இன்று 1.4 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

HUL, Titan, Nestle India, Power Grid, Nestle India, IndusInd Bank, NTPC, Axis Bank, Bajaj Finance, Barti Airtel, Ultra Chemical, LT மற்றும் Maruti போன்ற நிறுவனங்களின் பங்குகளும் கணிசமாக விற்பனையாகின்றன.

FMCG மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு தவிர, மற்ற அனைத்து துறை பங்குகளும் ஏற்றத்தில் பச்சை நிறத்தில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ரெஸ்டாரன்ட் பிராண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை என்எஸ்இயில் மிகவும் செயலில் உள்ள பங்குகளாக உள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு, 83 ரூபாய் 08 காசுகளாக உள்ளது.

மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி: வங்கிகளுக்கு RBI வைத்த செக்... தினமும் ரூ.5,000 இழப்பீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News