ITR Filing: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகின்றது. தங்கள் ஐடிஆர் -ஐ தாக்கல் செய்வதற்கான ஆயத்தப்பணிகளில் வரி செலுத்துவோர் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் தாமாகவே ஆன்லைனில் ஐடிஆர் -ஐ தாக்கல் செய்கிறார்கள். சிலர் தங்கள் ஆடிட்டர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் மூலமாக இதை செய்கிறார்கள். எப்படி செய்தாலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது பற்றிய முக்கிய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதும், இதற்கான ஆவணங்களை தயாராக வைப்பதும் மிக முக்கியமாகும்.
ஒவ்வொரு வருடமும் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது அவசியமாகும். இந்த ஆண்டு மார்ச் 31, 2024 அன்று முடிவடையும் நிதியாண்டிற்கான ITR ஐத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 31 ஜூலை 2024. இந்த தேதி அனைவருக்கும் தெரியும் என்றாலும், பல சமயங்களில் பலர் கடைசி தேதிக்குள் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய முடிவதில்லை. வருமானம் தொடர்பான முக்கியமான தகவல்களைச் சேகரிப்பதிலோ அல்லது படிவத்தை நிரப்புவதிலோ சில சமயங்களில் சிலர் சிக்கலை சந்திகிறார்கள். இதன் காரணமாக, சரியான நேரத்தில் வருமானத்தை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது.
ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடுவை தவறவிட்டால் என்ன நடக்கும்?
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஏதாவது ஒரு காரணத்தினால் தவற விட்டால், அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இதற்கு வருமான வரித் துறை, வரி செலுத்துவோருக்கு மற்றொரு வாய்ப்பையும் அளிக்கின்றது, அதை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
பிலேடட் ஐடிஆர்
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டவர்கள் ஆண்டின் இறுதிக்குள், அதாவது 31 டிசம்பர் 2024 -க்குள் தாமத ஐடிஆர் -ஐ (Belated ITR) தாக்கல் செய்யலாம். இருப்பினும், பிலேடட் ஐடிஆர் -ஐத் தாக்கல் செய்ய அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் விதிக்கப்படும் அபராதம், வரி செலுத்தும் நபரின் வருமானத்திற்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடிஆர் -ஐ காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், விதிக்கப்படும் அபராதத்தின் விவரங்கள் இதோ:
- வரி செலுத்துவோரின் வருமானம் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு அபராதமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
- வரி செலுத்துவோரின் வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு அபராதமாக ரூ.5,000 வரை செலுத்த வேண்டி வரலாம்.
தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதால் ஏற்படும் பிற பிரச்சனைகள் என்ன?
ஒருவர் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், அபராதம் செலுத்துவதைத் தவிர, இன்னும் பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி வரலாம். இவற்றில் முக்கியமானவை சில நிதிச் சிக்கல்கள். செலுத்தப்படாத வரிகளுக்கு வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும். இது தவிர, சரியான நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகளையும் தாமதமாக வரி செலுத்துபவர்கள் இழக்க நேரிடலாம். வருமான வரிச் சட்டத்தின் 234A பிரிவின் கீழ் இதற்கான விதி வருகிறது. காலக்கெட்விற்குப் பிறகு நீங்கள் ரிட்டனை தாக்கல் செய்தால், தாமதாமான ஒவ்வொரு மாதத்திற்கும் 1% வட்டி செலுத்த வேண்டும். வரி செலுத்துவோர் சரியான நேரத்தில் வரி செலுத்துவதை ஊக்குவிக்க இந்த அபராதமும் வட்டியும் விதிக்கப்படுகிறது.
அபராதத்தைத் தவிர்ப்பது எப்படி?
வரி பொறுப்பு இல்லாமல், ரீஃபண்ட் பெற மட்டுமே வரி செலுத்துவொர், காலக்கெடுவிற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டாலும், அபராதம் விதிக்கப்படாது. எனினும், அபராதத்தை தவிர்க்க, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 க்கு முன் வரி செலுத்தோர் தங்கள் ITR ஐ தாக்கல் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | PM Kisan உதவித்தொகை உயர்த்தப்படுமா? பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நல்ல செய்தி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ