Budget 2024: பிஎம் கிசான் தவணை அதிகரிக்கிறதா? விவசாயிகளுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய நல்ல செய்தி!!

Budget 2024: பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை 3 தவணைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தவணைத் தொகை ரூ.2000 ஆக உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து நான்றாக உயர்த்தப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 23, 2023, 09:42 AM IST
  • பிரதமர் கிசான் யோஜனா என்றால் என்ன?
  • PM கிசானின் அடுத்த தவணை எப்போது வரும்?
  • PM கிசான் தவணை அதிகரிக்குமா?
Budget 2024: பிஎம் கிசான் தவணை அதிகரிக்கிறதா? விவசாயிகளுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய நல்ல செய்தி!! title=

Budget 2024: நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பிப்ரவரி 1, 2024 அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது. ஆகையால் பிப்ரமவரி 2024 -இல் நிதி அமைச்சர் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். எனினும், வரவிருக்கும் பட்ஜெட் 2024 இல் விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தல் வரவுள்ள நிலையில், விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் அரசு சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. 

இம்முறை பட்ஜெட்டில் (Budget 2024) சிறப்பு அறிவிப்புகள் எதுவும் இருக்காது. எனினும், விவசாயிகளுக்கான பெரிய சில செய்திகள் கண்டிப்பாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM Kisan Samman Nidhi) தவணையை உயர்த்தி நிதி அமைச்சர் அறிவிக்கலாம்.

PM கிசான் தவணை அதிகரிக்குமா? 

பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை 3 தவணைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தவணைத் தொகை ரூ.2000 ஆக உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து நான்றாக உயர்த்தப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அரசு 1 தவணையை அதிகரிக்கலாம். தற்போது வரை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இந்த தவணை விவசாயிகளுக்கு செலுத்தப்படுகிறது. ஆனால், இது உயர்த்தப்பட்டால், அதன் பிறகு விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை அதாவது காலாண்டு அடிப்படையில் இந்த தவணை வழங்கப்படும். இந்த மாற்றம் எற்பட்டால், இது ஏப்ரல் 2024 முதல் தொடங்கும். 

எனினும், தவணைத் தொகையும் அதிகரிக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தவணையை உயர்த்தினால், விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாய் நிச்சயம் கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.8000 கிடைக்கலாம். வேளாண் நிபுணர்கள் மற்றும் எஸ்பிஐ ஈகோவ்ராப் (SBI ecowrap) அறிக்கையும் விவசாயிகளுக்கான தொகையை அதிகரிக்க முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஎம் கிசானின் தவணையை அதிகரிக்க காரணம் என்ன?

பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வரும் நாட்களில் விவசாயமும் ஏற்றுமதிப் பொருளாதாரமாக அதன் பிடியை வலுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு விநியோக சங்கிலியை வலுப்படுத்துவதும் ஒரு முக்கிய பகுதியாகும். தவிர, மற்ற நாடுகளிலும் தினைக்கு தேவை உள்ளது. இவ்வாறான நிலையில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 15 தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு தவணை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில், விவசாயிகளின் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். விதைகள் மற்றும் உரங்களின் விலை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க அரசு உதவுகிறது. பிஎம் கிசானில் (PM Kisan) தவணை அல்லது தொகையை அதிகரிப்பது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.

மேலும் படிக்க | பிஎஃப் தொகைக்கு வரி விதிக்கப்படுமா? புதிய இபிஎஃப் வரி விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்

PM கிசானின் அடுத்த தவணை எப்போது வரும்?

பிஎம் கிசானின் 16வது தவணை ஜனவரி-பிப்ரவரி 2024 இல் வர உள்ளது. ஆனால், அதன் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் கணக்கில் 16வது தவணை (PM Kisan 16th Installment) தொகையை வெளியிடுவார். இதன் மூலம் 13 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயனடையலாம். இருப்பினும், இதற்கு முன், eKYC விதிகள் மற்றும் பிற தரநிலைகளை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும்.

பிரதமர் கிசான் யோஜனா என்றால் என்ன?

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் (PM Kisan samman Nidhi Yojana) கீழ், பயனாளிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை ஆண்டுக்கு 6000 ரூபாய் ஆகும். இது நேரடியாக வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். பிரதமர் மோடியே (PM MOdi) ஒரு வருடத்தில் மொத்தம் 3 தவணைகளை வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுகிறார். 2023-24 மத்திய பட்ஜெட்டில், பிரதமர் கிசான் சம்மான்ன் நிதியின் கீழ் 11.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடி ரொக்கப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | Year Ender 2023: இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி செய்த அதிரடி மாற்றங்கள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News