SCSS: ஜாக்பாட் வருமானம், அதிக வட்டி... அசத்தல் பலன் தரும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது நாட்டின் மூத்த குடிமக்களுக்காக அரசாங்கத்தால் துவக்கப்பட்ட மிக லாபகரமான மற்றும் பாதுகாப்பான திட்டமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 21, 2024, 02:45 PM IST
  • SCSS: இந்த திட்டம் யாருக்கானது?
  • இதன் டெபாசிட் தொகை என்னவாக இருக்கும்?
  • டெபாசிட் காலத்தை நீட்டிக்க முடியுமா?
SCSS: ஜாக்பாட் வருமானம், அதிக வட்டி... அசத்தல் பலன் தரும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் title=

Senior Citizen Saving Scheme: அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Saving Scheme), குறிப்பாக முதியோருக்கானது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரசாங்கம் SCSS இன் வட்டி விகிதத்தை தீர்மானிக்கிறது. சில காலாண்டுகளில் இது அதிகரிக்கப்படுகின்றது, சில காலண்டுகளில் இது அப்படியே தொடரப்படுகின்றது. ஜனவரி-மார்ச் 2024 காலாண்டிற்கான SCSS மீதான வட்டி விகிதத்தை அரசாங்கம் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்கள் (Senior Citizens) சேமிப்புத் திட்டத்க்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த திட்டத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது நாட்டின் மூத்த குடிமக்களுக்காக அரசாங்கத்தால் துவக்கப்பட்ட மிக லாபகரமான மற்றும் பாதுகாப்பான திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு தற்போது 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த காலாண்டில் அதாவது ஜனவரி-மார்ச் 2024க்கான SCSS மீதான வட்டி விகிதத்தை அரசாங்கம் அதிகரிக்கவில்லை, முன்னர் இருந்த விகிதத்திலேயே இது தொடர்கிறது. 

குறிப்பாக முதியோர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் (Central Government) இந்த சிறப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் முன் இதற்கான விதிகளை பற்றி அறிந்துகொள்வது மிக அவசியமாகும். அதன் உதவியுடன் இந்த திட்டத்திற்கான உங்கள் திட்டமிடலை நீங்கள் செய்யலாம். 

SCSS: இந்த திட்டம் யாருக்கானது?

- அரசின் இந்த சிறப்புத் திட்டத்தை மூத்த குடிமக்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தத் திட்டம் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கும்.

- இது தவிர, ஓய்வு பெற்ற (retired) அல்லது தன்னார்வ (voluntary retirement) அல்லது சிறப்பு தன்னார்வத் (special voluntary retirement) திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற 55 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் இதில் சேரலாம்.

-  முன்னாள் ராணுவ வீரர்களாக உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் (சிவில் பாதுகாப்புப் பணியாளர்களைத் தவிர) இதில் சேரலாம். அதாவது முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பும் ஊழியர்கள் SCSS கொடுப்பனவைப் பயன்படுத்த முடியாது.

இதன் டெபாசிட் தொகை என்னவாக இருக்கும்?

- 2023 பட்ஜெட்டில் SCSS இன் அதிகபட்ச வைப்புத் தொகையை 30 லட்சமாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

- கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், திட்டத்தின் கூட்டுதாரராகவோ அல்லது ஒரே நாமினியாகவோ இருக்கும் வாழ்க்கைத் துணை, தபால் அலுவலகம் (Post Office) அல்லது வங்கிக் கிளைக்குத் (Bank) தெரிவித்து SCSS கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | இன்னும் 10 நாட்களே... மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அலவன்ஸ் 3%, டபுள் சம்பளம்

டெபாசிட் காலத்தை நீட்டிக்க முடியுமா? 

- இந்தக் கணக்கை குறைந்தபட்சத் தொகையான ரூ. 1000 அல்லது அதன் பல மடங்குக்கு, அதிகபட்சத் தொகையான ரூ. 30,00,000 -க்கு உட்பட்டு திறக்கலாம். 

- அதன் வைப்பு காலம் 5 ஆண்டுகள் ஆகும், இது 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.

- SCSS மீதான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் தீர்மானிக்கிறது என்று பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். எனினும், இந்த முறை அரசு இந்த வட்டி விகிதத்தை (Interest Rate) மாற்றாமல் முன்னர் இருந்த நிலையிலேயே தொடர்ந்தது. 

- உங்கள் டெபாசிட்டுக்கு 8.2% வட்டி கிடைக்கும். வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் செலுத்தப்படும், இதற்கு முழுமையாக வரி விதிக்கப்படும்.

- நீங்கள் ஒரு எஸ்சிஎஸ்எஸ் கணக்கைத் (SCSS Account) திறக்க விரும்பினால், வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் அதைச் செய்யலாம். 

- கணக்கைத் திறக்க நீங்கள் முதலில் இதற்கான படிவத்தை நிரப்ப வேண்டும். மேலும் தேவையான KYC ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் ஓய்வூதிய நிதி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

- நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட SCSS கணக்குகளை திறக்கலாம். ஆனால் இந்த அனைத்து SCSS கணக்குகளிலும் உள்ள மொத்த வைப்புத்தொகை ரூ.30 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | Budget 2024: வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி... வரி விலக்கு வரம்பில் மாற்றமா?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News