புதுடெல்லி: JEEP இன் 4 புதிய எஸ்யூவிகள் சந்தைக்கு வர உள்ளன, அவற்றின் சிறப்பம்சங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். JEEP பிராண்டில் பயணிக்க விரும்புபவர்களுக்கு 2021ஆம் ஆண்டில் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. Fiat Chrysler Automobiles ஆட்டோ நிறுவனம் 4 புதிய ஜீப் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
தனதுஉள்ளூர் தயாரிப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் 4 புதிய ஜீப் எஸ்யூவிகளை தயாரிக்க இந்தியாவில் 250 மில்லியன் டாலர்களை Fiat Chrysler Automobiles நிறுவனம் முதலீடு (Investment) செய்கிறது.
ஃபியட் (Fiat) $ 45 கோடி இந்தியாவில் முதலீடு செய்கிறது
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 450 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளது. 2022 இறுதிக்குள் இந்தியாவில் (India) 4 புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read | BSNL இன் புதிய சலுகை ஜனவரி 31 உடன் முடிவு, முந்துங்கள் மக்களே!
அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மாதிரிகள் (Jeep Model Launch)
முற்றிலும் புதிய tஹயாரிப்புகளான இந்த வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. 2021 மேட்-இன்-இந்தியா வாகனம் ஜீப் காம்பஸ் (Jeep Compass), உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Three-Row ஜீப் எஸ்யூவி (Jeep SUV), ஜீப் ரேங்லர் (Jeep Wrangler) மற்றும் அடுத்த தலைமுறை Jeep Grand Cherokee ஆகியவை அடங்கும். ரஞ்சங்கானில் உள்ள எஃப்.சி.ஏ கூட்டு நிறுவன உற்பத்தி நிலையத்தில் இவை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்.
The time to live legendary is coming soon. @milindrunning
Visit https://t.co/g4Yw4rWwwj to sign up for updates#OIIIIIIIO #Jeep #JeepIndia #NewCompass #LiveLegendary #MilindSoman #ComingSoon #JeepLife #2021 pic.twitter.com/97oOHJSpDi
— Jeep India (@JeepIndia) January 6, 2021
ரஞ்சங்கான் (Ranjangaon) தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்
புதிய 250 மில்லியன் டாலர் முதலீட்டில், ரஞ்சங்கானில் தயாரிக்கப்பட்ட புதிய ஜீப் எஸ்யூவியுடன் பல்வேறு பிரிவுகளும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 45 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும், இது இதற்கு முன்பு தெரிவித்திருந்த முதலீட்டைத் தவிர கூடுதலானது என்று எஃப்சிஏ (FCA) இந்தியா நிர்வாக இயக்குனர் பார்த்தா தத்தா கூறினார்.
Also Read | Eiffel Tower அளவிலான asteroid பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறது!!
ஜீப் ரேங்லர் (Jeep Wrangler)
கடந்த ஆண்டு, ஜீப் இந்தியா தனது எஸ்யூவி ரேங்லரின் பதிப்பை அறிமுகப்படுத்தியது. புதிய மாடலின் சஹாரா பதிப்பில் 2 மற்றும் 4 கதவுகள் என்ற தெரிவுகள் உள்ளன. நான்காவது தலைமுறை ஜீப் ராங்லர் (fourth generation Jeep Wrangler) தோற்றம் வில்லிஸுடன் மிகவும் ஒத்திருக்கிறது, இது நவீன தோற்றத்தை அளிக்கிறது. முன்புறத்தில் சுழலும் ஹெட்லேம்ப்கள் உள்ளன. சக்கரங்களும் சூப்பர் தோற்றத்தில் ஈர்க்கும் விதத்தில் உள்ளது.
ஜீப் ரேங்லர் உட்புற வடிவமைப்பு (Jeep Wrangler Interior)
நான்காம் தலைமுறை ஜீப் ரேங்லரின் உட்புற வடிவமைப்பு பாரம்பரியமானது. இந்த எஸ்யூவியில் பயணம் செய்வது மிகவும் வசதியானதாக இருக்கும். இது 8.4 அங்குல டச் ஸ்க்ரீன் கொண்டது. அதோடு, 7 அங்குல TFT LEDயில் தகவல்கள் கிடைக்கும். வாகனத்தின் எஞ்சினை இயக்க ignitionக்கு பதிலாக Button அமைக்கப்பட்டுள்ளது.
Also Read | TV வாங்கினால் Phone ஃப்ரீ! Samsung இன் சூப்பர் மெகா ஆப்பர் அறிமுகம்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR