எங்குமே காணமுடியாத அசாதாரண ஊதா-இளஞ்சிவப்பு வைரம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 26.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.
"தி ஸ்பிரிட் ஆஃப் தி ரோஸ்" என்று பெயரிடப்பட்ட 14.8 காரட் நகை, மிகவும் விலை உயர்ந்தது. மிகவும் பெரியது. அதன் இளஞ்சிவப்பு நிறம் அசாதரணமானது. பொதுவாக இளஞ்சிவப்பு நிற வைரக் கற்களில் 99 சதவீதம் 10 காரட்டுகளுக்கு கீழ் தான் இருக்கும். ஆனால், இந்த வைரம் 14.8 காரட், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வைரக் கல்.
ரஷ்யாவின் ஒரு சுரங்கத்தில் இருந்து கிடைத்த இந்த சூப்பர் மெகா வைரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வைரத்திற்கு பெயர் வைத்த கதை உங்களுக்குத் தெரியுமா? 1911 ஆம் ஆண்டில் "The Spirit of the Rose" என்ற பாலே நடனத்தை நடனக் கலைஞர் ரஸ்ஸஸ் (Russes) மற்றும் வாஸ்லாவ் நிஜின்ஸ்கி (Vaslav Nijinsky) ஆகியோர் அற்புதமாக நிகழ்த்தினர். அபூர்வமான அந்த கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமான அதிசயமான வைரத்திற்கு "The Spirit of the Rose" என்று பெயர் சூட்டப்பட்டது. இது அபூர்வ பாலே கலைத் திறனுக்கு கொடுக்கப்பட்ட உச்சபட்ச மரியாதையாக கருதப்பட்டது.
அசாதாரணமான அளவில் இருந்தாலும் "The Spirit of the Rose வைரம் குறைபாடற்ற உள் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. எனவே அதற்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு விலை கிடைத்தது. போடு, ஜெனீவாவில் உள்ள Sotheby அதிக மதிப்பைப் பெற்றுத் தர உதவியது.
ஜெனீவாவில் விற்பனையான குறைபாடற்ற இந்த வைரம் ஓவல் வடிவ "தி ஸ்பிரிட் ஆஃப் தி ரோஸ்" வைரம் 23 மில்லியன் டாலர் முதல் 38 மில்லியன் டாலர் வரை பெறலாம் என்று சோதேபிஸ் மதிப்பிட்டது.
$16 மில்லியனில் தொடங்கிய ஏலம் இறுதியில் $21 மில்லியனுக்கு விலை போனது. இதில் கமிஷன் தொகை சேர்க்கப்படவில்லை, $21 மில்லியனுக்கான கமிஷன் தனியாக கொடுக்கப்பட வேண்டும் என்றால், இந்த வைரத்தின் விலை, அதைப் போலவே அசாதரண பிரமிப்பைத் தரக்கூடியதாக இருக்கிறது.
சரி, இந்த அதிசய வைரத்தை வாங்கிய அபூர்வ மனிதர் யார் என்று பார்த்தால், அவர் அநாமதேயமாக நபராக இருக்கிறார். ஏலம் எடுத்தவர் ஏலம் நடைபெறும் போது நேரில் வரவில்லை, தொலைபேசியின் மூலமே ஏலத்தொகையை கேட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, அவர் தனது பெயரை வெளியிடுவதற்கும் விரும்பவில்லையாம்!!! இந்த விளக்கத்தை கூறியது வைர விற்பனையை நடத்தி முடித்த Sotheby நிறுவனம்.
ரஷ்ய சுரங்க நிறுவனமான அல்ரோசா (Alrosa), தனது மூன்று அசாதாரண வைரங்களுக்கும் புகழ்பெற்ற ரஷ்ய பாலே நிகழ்ச்சிகளின் பெயரையே வைத்தது.
வண்ணமயமான ரத்தினக் கற்கள் சமீபத்திய ஆண்டுகளில் செல்வந்தர்களால் மிகவும் விருப்பத்துடன் வாங்கப்படுகின்றன. இதை மிகவும் பெருமைக்குரிய விஷயமாக பணக்காரர்கள் கருதுகின்றனர்.
உலகின் மிகப் பெரிய இளஞ்சிவப்பு வைரங்களை உற்பத்தி செய்த மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்கைல் (Argyle) சுரங்கம், போதுமான அளவுக்கு வைரங்கள் கிடைக்காததால், கடந்த வாரம் உற்பத்தியை நிறுத்தியது.
"இந்த வைரத்தை வாங்கியவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. எதிர்வரும் ஆண்டுகளில் இளஞ்சிவப்பு வைரங்களுக்கான விலைகள் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரிக்கும்" என்று ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆன்லைன் வைர நகைக்கடை குழுமம் 77இன் நிர்வாக இயக்குனர் டோபியாஸ் கோர்மிண்ட் (Tobias Kormind) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயற்கை வண்ணங்களை கொண்ட வைரங்கள் lattice அமைப்பைக் கொண்டுள்ளன, அவை வெண்ணிறக் கற்களைக் காட்டிலும் அதிக ஒளியைப் பிரதிபலிக்கின்றன.
Also Read | அயோத்தியில் பிரம்மாண்ட தீபாவளி, கின்னஸ் சாதனை அரங்கேறுகிறது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR