நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ரயில் டிக்கெட் புக்கிங் வரை... முழு லிஸ்ட் இதோ

Major Changes From November 1, 2024: அடுத்த மாதம், ரயில் டிக்கெட் முன்பதிவு, கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், எல்பிஜி சிலிண்டர் விலைகள் என பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 30, 2024, 12:19 PM IST
  • பணப்பரிவர்த்தனை விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.
  • எல்பிஜி சிலிண்டர் விலைகளில் மாற்றம்.
  • .SEBI மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு கடுமையான விதிகளை அமல்படுத்தப் போகிறது.
நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ரயில் டிக்கெட் புக்கிங் வரை... முழு லிஸ்ட் இதோ title=

Major Changes From November 1, 2024: இன்னும் இரண்டு நாட்களில் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும், பெரும்பாலும் சில புதிய விதிகள் அறிமுகம் ஆகும். அல்லது பழைய விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில், நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், பல புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இவற்றின் தாக்கம் சாமானியர்களின் வாழ்வில் கண்டிப்பாக இருக்கும்.

அடுத்த மாதம், ரயில் டிக்கெட் முன்பதிவு, கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், எல்பிஜி சிலிண்டர் விலைகள் என பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

டிராய் புதிய விதிகள் (TRAI New Rules)

நவம்பர் 1 முதல் தொலைத்தொடர்பு துறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. ஸ்பேமை நிறுத்த மெசேஜ் டிராக்கிங்கை செயல்படுத்துமாறு ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஸ்பேம் செய்திகளைக் கண்காணிக்கவும் தடுக்கவும் விதிகளை அமல்படுத்த வேண்டும். மெசேஜ் டிரேசபிலிட்டி விதியின் கீழ், டெலிகாம் நிறுவனங்கள் சந்தேகத்திற்கிடமான அல்லது போலி எண்களைக் கண்டறிந்து உடனடியாக அவற்றைத் தடுக்கும், அதாவது பிளாக் செய்யும். பிளாக் செய்யப்பட்டவுடன் இந்த எண்களிலிருந்து பயனர்களுக்கு செய்திகளை அனுப்ப முடியாமல் போகும். இந்த வகையில் பயனர்களுக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். 

ரயில் முன்பதிவு (Train Advance Booking)

நவம்பர் 1-ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள் மாற்றப்பட உள்ளன. இனி பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பு இருந்தது போல, 120 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்ய முடியாது. 60 நாட்களுக்கு முன்னர்தான் முன்பதிவு செய்ய முடியும். பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செயல்முறையை எளிதாக்கும் வகையில் இந்திய ரயில்வே (Indian Railways) அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு விதிகளில் இந்த மாற்றத்தை செய்துள்ளது.

வங்கி விடுமுறை நாட்கள் (Bank Holidays)

பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறைகள் காரணமாக நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக விடுமுறைகள் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, பல்வேறு மாநிலங்களில் வார விடுமுறை மற்றும் பண்டிகைகள் காரணமாக நவம்பர் மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனினும், இந்த விடுமுறை நாட்களில் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் ஆன்லைன் சேவைகளையும் பயன்படுத்தலாம். இந்தச் சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் அத்தியாவசிய வங்கிச் செயல்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை எந்த இடையூறும் இன்றி மேற்கொள்ள முடியும்.

பணப்பரிவர்த்தனை விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது (RBI Money Transfer Rule)

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), உள்நாட்டு பணப் பரிமாற்றத்திற்கான (DMT) புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இவை நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். ரிசர்வ் வங்கியின் புதிய பணப் பரிமாற்ற விதிகள் வங்கி செயல்முறைகளில் மோசடிகளைத் தடுப்பதையும் இவை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

எல்பிஜி சிலிண்டர் விலை (LPG Cylinder Price)

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றுகின்றன. 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் நவம்பர் 1 ஆம் தேதி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் அட்டகாசமான ஊதிய உயர்வு: எவ்வளவு? எப்போது?... மத்திய அரசு ஊழியர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்

ஏடிஎஃப், சிஎன்ஜி, பிஎன்ஜி விலைகள் (ATF, CNG, PNG Prices)

இது தவிர, எண்ணெய் நிறுவனங்கள் ATF (Air Turbine Fuel), CNG மற்றும் PNG ஆகியவற்றின் விலையையும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் மாற்றுகின்றன. சமீப மாதங்களில் ஏடிஎஃப் விலைகள் குறைந்துள்ளன. இந்த தீபாவளியில் விலைகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளிலும் மாற்றங்கள் இருக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds)

செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு கடுமையான விதிகளை அமல்படுத்தப் போகிறது. நவம்பர் 1 முதல், AMC கள் (Asset Management Companies), தங்கள் நாமினிகள் அல்லது உறவினர்கள் மூலம் செய்யப்படும் ரூ.15 லட்சத்துக்கும் மேலான பரிவர்த்தனைகளைப் பற்றி இணக்க அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் மியூசுவல் ஃபண்டுகளின் வெளிப்படைத்தன்மை அதிகரித்து உள்தகவல் மூலம் விற்று-வாங்கி செய்யப்படும் பரிவர்த்தனைகளை நிறுத்த உதவி கிடைக்கும்.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit card)

பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்டு (SBI Card), கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சில புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. நவம்பர் 1 முதல், அன்செக்யூர் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு மாதாந்திர நிதிக் கட்டணம் 3.75% ஆக இருக்கும். இதுமட்டுமின்றி, மின்சாரம் மற்றும் எரிவாயு போன்ற பயன்பாடுகளுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தினால் 1% கட்டணம் விதிக்கப்படும் என்பதையும் வங்கி வாடிக்கையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | மக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News