இந்தியா, தனது தற்போதைய பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியா 115 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று Natixis SA பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. நேற்று (2024, மே 20 திங்கட்கிழமை) வெளியிடப்பட்ட Natixis SA பகுப்பாய்வின்படி, 2030 க்குள் இந்தியா 115 மில்லியன் வேலைகளை உருவாக்கி, மக்களுக்கு வேலைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
தற்போதைய பொருளாதார வேகத்தைக் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், சேவைகள் மற்றும் உற்பத்தி ஆகிய இரண்டிலும் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவின் அவசரத் தேவை இது என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இந்தியா ஆண்டுதோறும் 16.5 மில்லியன் வேலைகளை உருவாக்க வேண்டும் என்று சொல்லும் Natixis இன் மூத்த பொருளாதார நிபுணரான Trinh Nguyen கருத்துப்படி, , இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் வேலைவாய்ப்பு 12.4 மில்லியனாக இருந்தது. Nguyen இன் ஆராய்ச்சியின்ப்டி, 10.4 மில்லியன் வேலைகள் உருவாக்கப்படவேண்டும். ஆனால், தற்போது வேலைவாய்ப்புகள் குறைக்கப்படும் சூழலே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | SBI: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! கட்டணத்தை உயர்த்திய வங்கி!
எச்சரிக்கை மணி
வேலைவாய்ப்புகளை கணிசமாக அதிகரிப்பது என்ற கடினமான இலக்கை அடைய வேண்டும் என்றால், இந்தியாவின் வளர்ச்சி இயந்திரம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உற்பத்தி முதல் சேவைகள் வரை அனைத்துத் துறைகளிலும் முன்னேறவேண்டும் என்று Nguyen தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தற்போதைய வேலைவாய்ப்பு நிலை
இந்தியாவில் வேலைவாய்ப்பு சூழ்நிலையை அவதானித்தால், சுமார் 53 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் உள்ளனர், இது 2021ஆம் ஆண்டின் கணிப்பு. இந்த வேலையில்லா மக்களில் 35 மில்லியன் பேர் தீவிரமாக வேலை தேடுபவர்கள் என்றால், 17 மில்லியன் மக்கள் வேலை செய்ய தயாராக இருந்தாலும் தீவிரமாக வேலை தேடவில்லை.
2000 மற்றும் 2019 க்கு இடையில் சுயதொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை 52% என்ற அளவில் நிலையானதாக இருந்தது, அதே நேரத்தில் வழக்கமான வேலைவாய்ப்பு கிட்டத்தட்ட 10 சதவீத புள்ளி அதிகரித்து, 14.2% இலிருந்து 23.8% ஆக அதிகரித்தது. ஆனால், இது 2022 இல் தலைகீழாக மாறியது, சுய வேலைவாய்ப்பு 55.8% ஆக அதிகரித்து, வழக்கமான வேலைவாய்ப்பின் பங்கு 21.5% ஆக குறைந்தது.
மேலும் படிக்க | தேர்தல் முடிவும் வரை எவ்வளவு பணம் கையில் கொண்டு செல்லலாம்? விதிகள் சொல்வது என்ன?
வேலையின்மையில் முதலிடத்தில் உள்ள மாநிலம்
டிசம்பர் 2022 நிலவரப்படி, ஹரியானாவில் இந்தியாவில் அதிக வேலையின்மை விகிதம் 37.4 சதவீதமாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு 7 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நாட்டின் 1.4 பில்லியன் மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை வழங்க இந்த வளர்ச்சி வேகம் போதுமானதாக இருக்காது. இந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பது முக்கியமான விஷயமாக உள்ளது என்பது நிலைமையின் தீவிரத்தை புரிந்துக் கொள்ள போதுமானது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 112 மில்லியன் வேலைகள் உருவானபோதிலும், உலக வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 58 சதவீதமாக உள்ளது, இது மற்ற ஆசிய நாடுகளை விட மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் மேலான பங்கைக் கொண்டுள்ள சேவைத் துறையில், தலையீடு மற்றும் தொழிலாளர் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சில வாய்ப்புகள் இருப்பதாக Nguyen சுட்டிக்காட்டினார். சீனாவை மையமாகக் கொண்ட விநியோகச் சங்கிலியிலிருந்து விலகி, பிற நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் போட்டியிட இந்தியா தனது உற்பத்தித் துறையை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும் படிக்க | மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ