புதுடெல்லி: நாட்டில் விரைவில் புதிய AC டபுள் டக்கர் ரயில் சேவை தொடங்க உள்ளது. ரயில் பெட்டி தொழிற்சாலை (RCF) கபுர்தலா ஒரு செமி ஸ்பீட் டபுள் டக்கர் ரயில் பெட்டியை வடிவமைத்துள்ளது, இதை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடியும்.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goel) இந்த தகவலை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்த டபுள் டெக்கர் கோச்சில் அனைத்து வகையான நவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டியில் 120 பேர் பயணிக்கலாம், மேல் டெக்கில் 50 பயணிகளும், கீழ் தளம் 48 பேரும் அமர முடியும். நாட்டில் இயங்கும் மற்ற டபுள் டக்கர் ரயில்களுடன் ஒப்பிடும்போது, அதிகமான பயணிகள் இந்த ரயிலில் பயணிக்கலாம். மேலும் இது 160 கிமீ வேகம் என்பதால், பயண நேரமும் குறைவு.
Rail Coach Factory, Kapurthala is leading from the front in indigenous development & innovation.
Take a glimpse of new generation Double Decker AC Chair Car Coach, capable of running at 160 kmph. RDSO will conduct safety trials before Railways inducts this coach into operations. pic.twitter.com/M613A7d0Kc
— Piyush Goyal (@PiyushGoyal) November 18, 2020
ஆர்.சி.எஃப் தயாரித்த இந்த ரயில் பெட்டி இப்போது ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்புக்கு (ஆர்.டி.எஸ்.ஓ) அனுப்பப்படுகிறது. இந்த ரயில் பெட்டி முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, வணிக பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படும். இந்த டபுள் டக்கர் கோச்சை நாட்டின் முக்கிய பாதைகளில் இயக்க ரயில்வே (Railway) திட்டமிட்டுள்ளது.
ALSO READ | இனி விமான பயணம் போல், ரயில் பயணத்திலும் லக்கேஜ்ஜை தூக்காமல் ஜாலியாக பயணிக்கலாம்..!!!
நவீன வசதிகளுடன் கூடிய டபுள் டக்கர் கோச்
1. வசதியாக பயணம் செய்யும் வகையில், பெட்டியின் அகலம் அதிகமாக வைக்கப்பட்டுள்ளது.
2. இன்டீரியர்களில் சிறந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
3. மொபைல் (Mobile) மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயிண்டுகள் வழங்கப்படுகின்றன.
4. ஜி.எஸ்.பி அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்பு
5. ஒவ்வொரு கோச்சிலும், அடுத்த ரயில் நிலையம் குறித்த தகவலை வழங்கும் எல்.ஈ.டி (LED) போர்ட் இருக்கும்
6. பயணிகள் பகுதியில் ஸ்லைடிங் கதவுகள் உள்ளன, அவை திறக்க மற்றும் மூட எளிதாக இருக்கும்.
7. ஒவ்வொரு கோச்சிலும் ஒரு மினி பேண்ட்ரி இருக்கும், அங்கு பயணிகளுக்கு சூடான உணவு கிடைக்கும்.
ரயில்வேயின் மேற்கு ரயில்வே மண்டலம் ஏற்கனவே இரண்டு டபுள் டக்கர் ரயில்களை இயக்குகிறது. ஒரு ரயில் மும்பை சென்ட்ரல் முதல் அகமதாபாத்( Ahmedabad) வரையிலும், மற்ற ரயில் போர்பந்தரில் இருந்து டெல்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையம் வரையிலும் இயக்கப்படுகிறது
ALSO READ | வங்கி கணக்கில் Zero Balance இருந்தாலும், பணம் எடுப்பது எப்படி ..!!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR