PM KISAN 14th Installment: கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான்) திட்டம், தொடங்கப்பட்டது, இது நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாயி குடும்பங்களுக்கும் விவசாய நிலத்துடன் வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சில விலக்குகளுக்கு உட்பட்டது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் (பிஎம் கிசான் யோஜனா) கீழ், மத்திய அரசு ஒவ்வொரு நிதியாண்டும் விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 தொகையை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது. விவசாய நிலத்தை தங்கள் பெயரில் வைத்திருக்கும் அனைத்து நில உரிமையாளர் குடும்பங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (பிஎம் கிசான் யோஜனா) கீழ் விவசாயிகளுக்கான 14-வது தவணையை அடுத்த சில நாட்களில் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. பிஎம் கிசான் யோஜனா மூலம் விவசாயிகளுக்கு 14 வது தவணையை வழங்குவது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்றாலும், மே 26 முதல் மே 31 வரை அவர்களின் வங்கி கணக்கில் பணம் மாற்றப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கிறது. கடந்த பிப்ரவரி 27-ம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் 12வது தவணை நிதிப் பலனை 8 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு நேரடிப் பலன்கள் பரிமாற்றத்தை வெளியிட்டார்.
பிஎம் கிசான் சம்மன் நிதி 14வது தவணை நிலை சரிபார்ப்பு:
1) https://pmkisan.gov.in/ என்கிற பிஎம் கிசான் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2) வலது புறத்தில், "டாஷ்போர்டு" என்ற மஞ்சள் நிற டேப் காணப்படும்.
3) இப்போது டாஷ்போர்டில் கிளிக் செய்யவேண்டும்.
4) கிளிக் செய்த பிறகு, நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
5) கிராம டாஷ்போர்டு டேப்பில் உங்கள் முழு விவரங்களையும் நீங்கள் நிரப்ப வேண்டும்
6) பிறகு மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் பஞ்சாயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
7) அதன்பிறகு ஷோ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
8) அடுத்ததாக உங்கள் விவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்
பிஎம்-கிசான் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டவர்களில் நிறுவன நிலம் வைத்திருப்பவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாய குடும்பங்கள், பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் மாநில அல்லது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு தன்னாட்சி அமைப்புகள் அடங்கும். மேலும் டாக்டர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ரூ.10,000 மேல் மாத ஓய்வூதியம் பெற்ற அல்லது ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களும் இத்திட்டத்தின் பலன்களை பெற தகுதியற்றவர்கள். பிஎம்-கிசான் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் அதன் பலன்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்களுக்கும், 2 ஹெக்டேர் வரையிலான நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஜூன் 2019ம் ஆண்டில் இந்த திட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் அவர்களது நிலத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் நிதி வழங்கப்பட்டது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து 14.5 கோடி விவசாயிகளுக்கும், அவர்களின் நிலத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், ஆண்டுக்கு ரூ.6,000 பலனை நீட்டிக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், இம்மாதம் இருமுறை ரேஷன் வினியோகம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ