ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை! இந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது!

Reserve Bank of India: ரிசர்வ் வங்கி பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. போதிய வருமானம் ஈட்டும் திறன் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jun 18, 2024, 03:46 PM IST
  • இந்த வங்கியில் உங்களிடம் கணக்கு உள்ளதா?
  • ரிசர்வ் வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளது.
  • முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை! இந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது! title=

Reserve Bank of India: இந்திய ரிசர்வ் வங்கி இன்று மீண்டும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. பூர்வாஞ்சல் என்ற கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இந்த வங்கி உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் அமைந்துள்ளது. போதுமான மூலதனம் மற்றும் வருவாய் இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் வங்கியை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) மூலம் மட்டுமே ஒவ்வொரு டெபாசிட்டரும் டெபாசிட் இன்சூரன்ஸ் க்ளெய்ம் தொகையை ரூ.5 லட்சம் வரை பெற முடியும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?

பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் தரவுகளின்படி, சுமார் 99.51 சதவீத டெபாசிட்தாரர்கள் தங்கள் முழு வைப்புத் தொகையையும் DICGC யிடமிருந்து பெற உரிமை பெற்றுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே இந்த கூட்டுறவு வங்கியானது அதன் தற்போதைய நிதி நிலையுடன் அதன் தற்போதைய வைப்பாளர்களுக்கு முழுப் பணத்தையும் செலுத்த முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை என்றும் கூறியுள்ளது.

அதனால் இந்த வங்கி இன்னும் இயங்கினால் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பூர்வாஞ்சல் வங்கி எந்த ஒரு சேவையையும் வழங்க முடியாது என்பதை ஆர்பிஐ தெளிவுபடுத்தி உள்ளது. வங்கியின் டெபாசிட்தாரர்களிடமிருந்து பெறப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மொத்த காப்பீடு செய்யப்பட்ட டெபாசிட்களில் ரூ.12.63 கோடியை DICGC ஏற்கனவேசெலுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

யெஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுக்கு அபராதம்

தனியார் வங்கிகளான யெஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இரண்டு வங்கிகளுக்கும் கோடிக்கணக்கில் அபராதம் விதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறியுள்ளதால் யெஸ் வங்கிக்கு ரூ.91 லட்சமும், ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தனியார் வங்கிகளும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. "யெஸ் வங்கி வாடிக்கையாளர் சேவை மற்றும் அலுவலக கணக்குகள் தொடர்பான வழிகாட்டுதல்களை மீறியுள்ளது. மேலும், அலுவலக கணக்குகளில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸ் RD திட்டம்... மாதம் ரூ.7000 முதலீட்டில் ரூ.12 லட்சம் பெறலாம்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News