SBI Patrons: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் நன்மைகள், வேறு எதிலும் கிடைக்காத அளவு அதிக வட்டி!

SBI Patrons scheme: SBI Patrons என்பது சூப்பர் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு, அதாவது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கால வைப்புத் திட்டமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 7, 2025, 02:29 PM IST
  • SBI Patrons திட்டத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்ன?
  • திட்டத்தின் வைப்பு காலம் மற்றும் தொகை எவ்வளவு?
  • மூத்த குடிமக்களுக்கு இதில் கிடைக்கும் வட்டி விகிதம் என்ன?
SBI Patrons: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் நன்மைகள், வேறு எதிலும் கிடைக்காத அளவு அதிக வட்டி! title=

SBI Patrons Scheme: நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. வயதிற்கு ஏற்ப இதற்கான தேவையின் அளவு மாறுபடும். இள வயதில் பணம் ஈட்ட பல வழிகளும், உடலில் தெம்பும் இருக்கும். ஆனால் முதுமையில் இவை அனைத்தும் குறையும். ஆகையால், நாம் அனைவரும் முதுமைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைக்க விரும்புகிறோம். வயோதிகத்தில் மாதா மாதம் நிலையான ஒரு வருமானம் இருப்பது மிக அவசியமாகும்.

State Bank of India

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), சமீபத்தில் இரண்டு புதிய வைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஹர் கர் லக்பதி' (Har Ghar Lakhpati) மற்றும் 'எஸ்பிஐ பேட்ரன்ஸ்' (SBI Patrons) என பெயரிடப்பட்ட இந்தத் திட்டங்கள் முன்பை விட வாடிக்கையாளர்களுக்கு அதிக நிதி நெகிழ்வுத்தன்மை மற்றும் சிறந்த பலன்களை வழங்குவதை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எஸ்பிஐ பேட்ரன்ஸ் திட்டம் குறிப்பாக, மூத்த குடிமக்களின் நலனுக்கான திட்டமாகும். டெபாசிட் சந்தையில் எஸ்பிஐக்கு சுமார் 23% பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SBI Patrons திட்டம் என்றால் என்ன?

SBI Patrons என்பது சூப்பர் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு, அதாவது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கால வைப்புத் திட்டமாகும். தற்போதைய விகிதங்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்குவதே இதன் நோக்கம்.

Super Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு இதில் கிடைக்கும் வட்டி விகிதம் என்ன?

இந்த திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள், மூத்த குடிமக்கள் அட்டை விகிதங்களில் 10 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) கூடுதல் வட்டி பெறுவார்கள். இதில் திட்ட காலத்திற்கு முன்னரே பணத்தை எடுக்கும் ப்ரீ மெச்யுர் வித்டிராயல் வசதியும் அளிக்கப்படுகின்றது. எனினும், இதற்கு பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

SBI Patrons திட்டத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்ன?

- 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து இந்தியர்களும் (SBI ஊழியர்கள் உட்பட) இதில் சேரலாம்.
- கூட்டுக் கணக்காக இருந்தால், முதன்மைக் கணக்கு வைத்திருப்பவருக்கு 80 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
- தற்போதுள்ள டெர்ம் டெபாசிட் வாடிக்கையாளர்களும் பலன் பெறுவார்கள்.
- இந்த நன்மை சில்லறை முதலீட்டாளர்களுக்கு மட்டுமே (ரூ. 3 கோடிக்கும் குறைவான டெபாசிட்) கிடைக்கும்.

SBI Patrons: திட்டத்தின் வைப்பு காலம் மற்றும் தொகை எவ்வளவு?

- குறைந்தபட்ச தொகை: ரூ.1,000

- அதிகபட்ச தொகை: ரூ.3 கோடிக்கும் குறைவாக.

- வைப்பு காலம்: 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை.

SBI Senior Citizens Saving Scheme:

மூத்த குடிமக்களுக்கான பல வித தேவைகளை மனதில் கொண்டு, பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தையும் (SCSS) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாக இருப்பதோடு மட்டுமல்ல, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கின் பலனையும் இது வழங்குகிறது.

மேலும் படிக்க | கூடுதல் ஓய்வூதியம், கம்யூட்டேஷன் மீட்பு விதிகளில் மாற்றம்: 65 வயதிலேயே இனி ஓய்வூதிய உயர்வா?

மேலும் படிக்க | அதிகரிக்கிறதா குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்? வலுக்கும் தொழிற்சங்கங்களின் கோரிக்கை, பட்ஜெட்டில் குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News