ஆரம்பமே அலப்பறை! 2025-ல் பிரச்சனைகளை சந்திக்கும் 7 ராசிகள்..யார் தெரியுமா?

Zodiac Signs That Are Going To Face Difficulties In 2025 : 2025ஆம் ஆண்டு, பலருக்கு ஆரம்பமே அலப்பறை கொடுக்கும் ஆண்டாக இருக்கிறது. இந்த ஆண்டில் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க உள்ளனர். அவர்கள் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jan 5, 2025, 05:18 PM IST
  • கடின காலத்தை சந்திக்க இருக்கும் ராசிகள்!
  • 7 ராசிகள் இருக்கின்றன..
  • என்னென்ன தெரியுமா?
ஆரம்பமே அலப்பறை! 2025-ல் பிரச்சனைகளை சந்திக்கும் 7 ராசிகள்..யார் தெரியுமா? title=

Zodiac Signs That Are Going To Face Difficulties In 2025 : அனைவருக்கும் எல்லா ஆண்டிலும் பிரச்சனைகள் என்பது வரத்தான் செய்யும். அப்படி 2025 ஆம் ஆண்டில் பிரச்சினைகளை சந்திக்க இருக்கும் சில ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம். 

விருச்சிகம்:

விருச்சிக ராசியை பொருத்தவரை இவர்கள் மனதளவில் உறுதியானவர்களாக இருப்பார்கள். அக்டோபர் 23 முதல் நவம்பர் 21 வரையிலான காலகட்டங்கள் பிரச்சனைகளை கொடுக்கும் வகையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோபம், சோகம் என எந்த உணர்ச்சிகள் ஏற்பட்டாலும் அதனை சமநிலையுடன் கையாள்வது நல்லது. அன்புக்குரியவர்களுடன் மோதல் ஏற்படவும் இதனால் உங்கள் உணர்ச்சிகள் பல சமயங்களில் தடுமாறமும் வாய்ப்புள்ளது. 

மேஷம்: 

தைரிய மனம் படைத்த ராசிக்காரர்களான இவர்கள் மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை சில கடினமான காலங்களை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த அசராத மன தைரியமே சில நேரங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். எனவே இந்த வகையிலான மன தைரியத்தை வெளிப்படுத்தினாலும் அது திமிராக வெளிக்காட்டப்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த சமயங்களில் கவனமாக இருக்கவும்.

மிதுனம்:

அறிவுக்கூர்மையால் பிறரை ரசிகரிக்கும் தன்மையுடைய மிதுன ராசிக்காரர்கள் வரும் மே 21 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அனைத்து விஷயங்களிலும் நாட்டம் கொண்ட இவர்கள் பலருடன் நட்பு பாராட்டவும் தயங்க மாட்டார்கள். ஆனால் இந்த சமயத்தில் யாருடன் பழகுகிறோம் என்பதை கவனத்தில் வைத்து பழகுவது நல்லது.

மீனம்: 

கற்பனைத் திறன் அதிகம் கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்கள் தங்களின் பகல் கனவுகளாலேயே பல சமயத்தில் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரி 19 முதல் மார்ச் 20ஆம் தேதி வரை பிரச்சனைக்குரிய சூழல்கள் உருவாகலாம். கற்பனை அவ்வப்போது எட்டி பார்க்கும் போது பகுத்தறிவுடன் செயல்பட்டு அதை சமநிலையுடன் கடந்து செல்வது நல்லது. 

சிம்மம்: 

தலைமை தாங்கும் பண்பு கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகமாகவே இருக்கும். மனவலிமை மற்றும் நம்பிக்கையை எப்போதும் கைவிடாத இவர்கள் இவரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரையிலான காலங்களில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க இருக்கின்றனர். பிரச்சனைகள் வரும்போது தப்பு யார் மீது இருந்தாலும், பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 

கடகம்: 

பிறர் பேசாமலேயே அனைத்தையும் புரிந்து கொள்ளும் தன்மை உடையவர்களாக இருப்பவர்கள் கடக ராசிக்காரர்கள். இவர்களுக்கு வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதி வரையிலான காலம் கொஞ்சம் கடினமான காலமாக இருக்கலாம். பிறரை புரிந்து கொள்வது முக்கியம் என்றாலும் இவர்கள் இவர்களை முதலில் புரிந்து கொள்வது மிகவும் நல்லது. இல்லையென்றால் சில மனக்கயங்களுக்கு ஆளாவர். எனவே அனைத்தையும் சரியாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.

மகரம்: 

சுய ஒழுக்கம், லட்சியம் ஆகியவற்றை இரு கண்களாக கொண்ட மகர ராசி காரர்கள், வரும் டிசம்பர் 22ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி வரை சில கடினமான காலங்களை சந்திக்க இருக்கின்றனர். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு வரை இவர்களுக்கு வெற்றிகரமான ஆண்டாவ இருந்தாலும், கடைசியில் சில பிரச்சனைகளை சந்திக்க உள்ளனர். தனக்குப் பிடித்தவர்களிடம் இருந்து விலகி இருக்கும் சூழலும் அவர்களுடன் சண்டைகள் ஏற்படும் சூழலும் உருவாகலாம். 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை. 

மேலும் படிக்க | 2025 ஜனவரி மாத பலன்கள்.... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை

மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன்: 2025 இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... ராகு, கேது, குரு, சனி பெயர்ச்சிகளால் நல்ல காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News