சட்டவிரோதமான மற்றும் கணக்கில் காட்டப்படாத பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்க, அரசாங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் பண வரம்பு விதிகளை (உயர் மதிப்பு பரிவர்த்தனைகள்) திருத்தியது. விதியை மீறினால், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் செலுத்தியதற்காக அல்லது பெற்றதற்காக செலுத்தப்பட்ட அல்லது பெறப்பட்ட தொகையில் 100 சதவீதம் வரை கடுமையான அபராதம் விதிக்கப்படலாம். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அமைத்துள்ள புதிய விதிகளின்படி, ஆண்டுதோறும் ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனிநபர்கள் இனி தங்களது பான் மற்றும் ஆதார் அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரு நாளில் ரூ.50,000 டெபாசிட் செய்ய நீங்கள் பான் எண்ணைக் காட்ட வேண்டும் என்றாலும், வருடாந்திர டெபாசிட்டுக்கு வரம்பு இல்லை. ஆனால் புதிய விதிகளின்படி, ஓராண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் அதிக அளவு பணம் எடுப்பதையும், டெபாசிட் தொகையையும் கண்காணிக்க பான் மற்றும் ஆதார் அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
பான் எண் இல்லாதவர்கள், ஒரு நாளில் ரூ.50,000க்கு மேல் அல்லது ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனை மேற்கொள்ள குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன் பான் எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வருமான வரித்துறை, மத்திய அரசின் பிற துறைகளுடன் இணைந்து நிதி மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற பணக் குற்றங்களின் அபாயத்தைக் குறைக்க பல ஆண்டுகளாக விதிகளை புதுப்பித்து, மாற்றியமைத்து வருகிறது. அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் ரொக்கப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, 2 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பெறுவதையும் அரசாங்கம் தடை செய்கிறது. எனவே, ஒரு நபர் 2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை, நெருங்கிய குடும்பத்திடமிருந்து கூட பெற முடியாது.
மேலும் படிக்க | SBI பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால் பணம் பன்மடங்காக பெருகும்
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பணப் பரிவர்த்தனைக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
1. இந்திய வருமான வரிச் சட்டங்கள் எந்தக் காரணத்திற்காகவும் 2 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தடை செய்கின்றன. உதாரணமாக, ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கினால், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வங்கி பரிமாற்றம் மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
2. நீங்கள் குடும்ப உறுப்பினரிடமிருந்து பணம் பெற்றாலும் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.
3. அதிக மதிப்புள்ள நிதி பரிவர்த்தனைகளில் ரொக்கப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, 2 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கத்தை யாரும் பெறுவதை அரசாங்கம் தடை செய்கிறது. எனவே, ஒரே நாளில், நெருங்கிய உறவினர்களிடம் இருந்தும், 2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகப் பெற முடியாது.
4. நன்கொடையாளரிடமிருந்து ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் தொகையை ரொக்கமால ஏற்றுக்கொள்ள முடியாது. ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணம் வாங்குபவர்களுக்கு, பெறப்பட்ட தொகைக்கு இணையான அபராதம் விதிக்கப்படும்.
மேலும் படிக்க | ITR: வருமான வரி தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களின் முழு விபரம் இதோ
5. வரி திட்டமிடலின் போது நீங்கள் உடல்நலக் காப்பீட்டிற்கு பணம் செலுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவோர் காப்பீட்டு பிரீமியத்தை பணமாக செலுத்தினால், பிரிவு 80D விலக்கு பெற தகுதியற்றவர்கள். இது வங்கி அமைப்பு மூலம் செய்யப்பட வேண்டும்.
6. ஒருவர் நிதி நிறுவனம் அல்லது நண்பரிடம் ரொக்க பணமாக கடன் வாங்கினால், மொத்தத் தொகை ரூ.20,000க்கு மேல் இருக்கக்கூடாது. கடன் திருப்பிச் செலுத்துவதற்கும் இதே விதி பொருந்தும்.
7. ஒரு சொத்து பரிவர்த்தனையில், அனுமதிக்கப்படும் அதிகபட்ச ரொக்கம் ரூ 20,000 ஆகும். ஒரு விற்பனையாளருக்கு முன்கூட்டியே அட்வான்ஸ் பணம் செலுத்தியிருந்தாலும், வரம்பில் மாற்றம் ஏதும் இல்லை
8. சுயதொழில் வரி செலுத்துவோர் என்று வரும்போது, ஒரே நாளில் ஒரு தனிநபருக்கு ரொக்கமாகச் செலுத்தப்பட்டால், 10,000 ரூபாய்க்கு மேலான எந்தச் செலவையும் அவர்கள் க்ளைம் செய்ய முடியாது. ரொக்க பணம் செலுத்துவதற்கான அதிகபட்ச வரம்பு ரூ.35,000 என சட்டம் நிர்ணயித்துள்ளது.
மேலும் படிக்க | Financial Tips: பணத்தை திட்டமிட்டு சேமித்து பணக்காரர் ஆக சில டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ