சீனாவின் பிரபல மொபைல் நிறுவனமான Xiaomi தனது அடுத்த வரவினை அறிமுகம் செய்துள்ளது!
ஜியோமி ஆனது தனது அடுத்த வரவான Redmi Y2-னை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் ஆனது கடந்தாண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த மொபைல் ஆனது Redmi S2-வின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பாகும்.
இந்தியாவில் இரண்டு வகைப்பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மொபைல் ஆனது ரூ.9999 மற்றும் ரூ.11999 ஆகிய இரண்டு விலைகளில், பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த Redmi Y2 ஆனது கருமை, கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகிறது. 16MP லென்ஸ் திறன் கொண்ட இந்த மொபைல் ஆனது Selfi பிரியர்களுக்கு பிரியமான மொபைலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 3GB RAM + 32GB நினைவக திறனடுன் வெளிவரும் மொபைல் ஆனது இந்திய மதிப்பில் Rs 9999.
- 4GB RAM + 64GB நினைவக திறனடுன் வெளிவரும் மொபைல் ஆனது இந்திய மதிப்பில் Rs 11,999
Xiaomi Redmi Y2 சிறப்பம்சம்சங்கள்...
- 5.99" HD தொடுதிரை(720×1440 pixels)
- ஆண்ட்ராய்ட் 8.1 செயல்திறன்.
- Snapdragon 625 SoC clocked பிராசஸர்,
- Adreno 506 GPU கிராப்பிக்ஸ் கார்ட்
- கைரேகை ஸ்கேனர்.
- 16MP முன் கேமிரா
- 12MP மற்றும் 5MP என இரண்டு பின் கேமிரா
- 256GB எக்ஸ்பேண்டபல் நினைவகம்.
- 3080mAh பேட்டரி திறன் என பல சிறப்பம்சங்களுடன் வெளிவரும் இந்த மொபைல் ஆனது அனைவரது கவனத்தினையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.