சபரிமலை போராட்டத்தில் வெடித்தது வன்முறை. 144 தடை உத்தரவு, இன்று 12 மணிநேரம் முழு அடைப்பு போராட்டம்.
Kochi: Kerala State Road Transport Corporation isn't conducting its services today. A KSRTC bus was vandalised at Laka near Nilakkal base camp by protesters yesterday. Sabarimala Protection Committee has called for a 12-hour statewide strike in Kerala today. #SabarimalaTemple pic.twitter.com/nh4uyh5WK3
— ANI (@ANI) October 18, 2018
கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் ஆண்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்திருக்கும். கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கலில் குவிந்த போராட்டக்காரர்கள் கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தினார்கள்.
இந்நிலையில் போராட்டத்தினால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து சபரிமலை பாதுகாப்பு கமிட்டி 12 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. அதன் பேரில் இன்று கேராளவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.