தமிழர்களின் ஆன்மிக பயணத்தில் தேங்காய்க்கும் வாழைப்பழத்திற்கும் தனி பங்கு உண்டு, இது பாதியில் வந்தது அல்ல, இறை வழிபாடுகளில் தொன்றுதொட்டு வந்துக்கொண்டிருப்பது!
நாம் இறைவழிபாட்டின் போது ஆரத்தி காட்டுவது என்பது இந்து பூஜைகள் மற்றும் சடங்குகளில் இருந்து பிரிக்க முடியாத ஒரு பழக்கம் ஆகும். நாம் கோயிலுக்கு சென்று பூஜை செய்தாலும் சரி, வீட்டில் இறைவனை வழிபட்டாலும் சரி அதில் தேங்காய் மற்றும் வாழைப்பழம் கண்டிப்பாக இடம் பெரும்.
நாம் இறைவழிபாட்டின் பொது வாழைப்பழம் வைத்து பூஜை செய்வது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?. தெரியவில்லை என்றால் பரவாயில்லை. தெரிந்துகொள்ளுங்கள்.
வழிபாட்டில் வாழைப்பழம் படைப்பது ஏன்...!
வழிபாட்டில் எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.
இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது. இப்படி எச்சில் படாத, மீதமாகாத பொருளான வாழைப்பழத்தை இறைவனுக்கு படைத்து அவனது அருளைப்பெறும்படி முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.