கோவா தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லும் மூன்று தம்பதிகள்!

கோவா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 3 தம்பதிகள் சட்டமன்றத்திற்கு ஜோடியாக செல்லவுள்ளனர். 

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Mar 10, 2022, 08:50 PM IST
  • கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 4 தம்பதிகளில், 3 தம்பதிகள் வெற்றி
கோவா தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லும் மூன்று தம்பதிகள்! title=

கோவா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு 12 இடங்களும், பாஜகவுக்கு 20 இடங்களும் கிடைத்துள்ளன. பிற கட்சிகளுக்கு 5 இடங்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன. இந்நிலையில் கோவாவையும் சேர்த்து 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பல அரசியல் தலைவர்களும் பாஜகவிற்கும் பிரதமர் மோடிக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 4 தம்பதிகளில், 3 தம்பதிகள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்லவுள்ளனர். 

மேலும் படிக்க | வேட்பாளர்களை ரிசார்ட்களில் தங்க வைத்த காங்கிரஸ், ஆம் ஆத்மி...தொடங்கியது அரசியல் ஆட்டம்

Micheal Lobo Couple

 

முதலாவது தம்பதியாக, காங்கிரஸ் கட்சியின் மைக்கேல் லோபோ, காலன்குட் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மைக்கேல் லோபோவின் மனைவி டெலிலா காங்கிரஸ் சார்பில் சியோலிம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டசபைக்குச் செல்லவுள்ளனர். 

Vishwajith Deviya

இரண்டாம் தம்பதியாக, பாஜக அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்துவரும் விஸ்வஜித் ரானே 8085 வாக்குகள் வித்தியாசத்தில் வால்போய்யிலும், அவரது மனைவி தேவியா விஸ்வஜித் ரானே 13943 வாக்குகள் வித்தியாசத்தில் போரிஎம் தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

Atanasio and his wife

மூன்றாம் தம்பதியாக, பாஜக வேட்பாளர் அடானசியோ மான்செரேட் பனாஜி தொகுதியிலும், அவரது மனைவி ஜெனிபர், தலெய்காவ் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் நான்காவதாக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தம்பதிகளான கவிதா கண்டோல்கரும், அவரது கணவர் கிரண் ஆகியோர் திவிம் மற்றும் அல்டோனா தொகுதிகளில் தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி...காங்கிரஸின் பரிதாப நிலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News